சோளக் காட்டு பாதையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஎன் ஆச ராசாவே

Sola Kaattu Pathayila Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சோளக் காட்டு பாதையில… ஏஏ…

—BGM—

பெண் : சோளக் காட்டு பாதையில…
வண்டி ஓட்டி போற மச்சான்…
சோடிக் குயில் பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…

—BGM—

பெண் : நான் பாடும் பாட்டுக்கு…
பதில் இருக்கா…

ஆண் : எம் பாட்டு வீசுற காத்து…
நீ காத்துல ஆடுற நாத்து…
அடி நீயா போட்டிக்கு சரி சோடி…
அடி போடி நீ வெறும் வாயாடி…

ஆண் : சோளக் காட்டு பாதையில… ஏஏ…

—BGM—

பெண் : வைகை ஆத்துத் தண்ணி…
பையப் பாயும் நின்னு…
பொன்னு வெளையும் எங்க மண்ணு…
பாக்கணும் ஆயிரம் கண்ணு… ஓஓ…

—BGM—

ஆண் : ஆன கட்டி உழுது…
ஆடி மாசம் வெதச்சு…
ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு…
எங்க ஊருக்குப் பேரு… ஓ…

பெண் : எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம்…
குயிலுக் கூட்டம் பாடும்…

ஆண் : எங்க ஓடக்குள்ள மரமெல்லாம்…
பாட்டுக்குத் தாளம் போடும்…

பெண் : சல சலக்கும் ஆத்துத் தண்ணி…
சிலு சிலுன்னு பாட்டு படிக்கும்…

ஆண் : கல கலக்கும் கரும்புச் சோல…
தெனம் புதுசா பாட்டு எடுக்கும்…

—BGM—

பெண் : சோளக் காட்டு பாதையில… ஏஏ…

—BGM—

குழு : கட்டான மயிலு…
மச்சானத் தேடுது…

—BGM—

குழு : மச்சானின் பார்வ…
எம் மேல பாயுது…

—BGM—

குழு : பொல்லாத நோக்கம் உண்டாகுது…
கல்யாண ஆசையில் திண்டாடுது…

குழு : ஆளான பருத்தி தானாக வெடிக்கும்…
கல்யாண மனசு தானாக பழுக்கும்…

—BGM—

பெண் : சிங்கம் புலியக் கண்டா…
மொறைச்சு நிப்பா பொண்ணு…
தெக்குச்சீம பேரக் கேளு…
வீரம் வெளஞ்ச மண்ணு… ஓஓஓ…

—BGM—

ஆண் : கம்பெடுத்து நிப்பான்…
எங்க ஊரு ஆளு…
வெள்ளக்காரன் பயந்து ஓடுன…
கதையக் கொஞ்சம் கேளு… ஓஓஓ…

பெண் : எங்க ஆத்தா குடுத்தது தாய்ப் பாலு…
எப்பவும் படிப்பேன் பாட்டு…

ஆண் : எங்க அப்பன் குடுத்தது தமிழ்ப் பாலு…
எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு…

பெண் : நான் பரம்பரையா பாட்டுக்காரி…
வெவரம் உள்ள கெட்டிக்காரி…

ஆண் : பண்ணபுரம் ஊருக்காரன்…
பாட்டுல நான் கெட்டிக்காரன்…

—BGM—

ஆண் : சோளக் காட்டு பாதையில…
பாட்டு கட்டிப் பாடும் குயிலே…
நானும் கூட பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…

—BGM—

ஆண் : நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா…

—BGM—

பெண் : உம் பாட்டு வீசுற காத்து…
நான் காத்துல ஆடுற நாத்து…
அட நானா போட்டிக்கு சரி சோடி…
எம் மாமா நான் வெறும் வாயாடி…

—BGM—


Notes : Sola Kaattu Pathayila Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. சோளக் காட்டு பாதையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading