ஒரு ஜீவன்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்விஜய் ஆனந்த்நான் அடிமை இல்லை

Oru Jeevan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்…
ஓயாமல் இசைக்கின்றது…
இரு கண்ணிலும் உன் ஞாபகம்…
உறங்காமல் இருக்கின்றது…

ஆண் : பாசங்களும் பந்தங்களும்…
பிரித்தாலும் பிரியாதது…
காலங்களும் நேரங்களும்…
கலைத்தாலும் கலையாதது…

ஆண் : ஸ்டுபிட் எவன் சொன்னான்…
ஹூ செட் இட் ஐ சே…
பாசமாவது பந்தமாவது…
ஆல் நான்சென்ஸ் ஐ சே… ஹஹஹஹா…

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்…
ஓயாமல் இசைக்கின்றது…

BGM

ஆண் : கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்…
இணையாத இருகோடுகள்… ஹா ஹா ஹா ஹா…
சேர்ந்தாலும் ஹா சில நாளில்…
கரைகின்ற மணல் வீடுகள்…

ஆண் : கட்டில் சொந்தம் என்னை கைவிட்டது…
தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது…
உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்…
யாருமில்லை எனக்காகத்தான்…
மலரே மலரே மடியில் தவழும் நிலவே…

ஆண் : ஹா… உங்கம்மா என்ன…
விலை கொடுத்து வாங்க நினைச்சா…
நான் யாருக்கும் அடிமை இல்லை…
இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சே… ஹாஹாஹா…

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்…
ஓயாமல் இசைக்கின்றது…

BGM

ஆண் : தெய்வங்கள் சில நேரம்…
தவறாக நினைக்கின்றது… ஹா ஹஹஹா…
பொருந்தாத இரு நெஞ்சை…
மணவாழ்வில் இணைக்கின்றது…

ஆண் : கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்…
உன் வாழ்விலே அது வியாபாரம்தான்…
மணிமாளிகை உன் வீடுதான்…
மாஞ்சோலையில் என் கூடுதான்…
மதுதான் மனைவி…
இனி என் வாழ்க்கை துணைவி…

ஆண் : நான் குடிப்பேன்…
கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா…
ஹஹஹஹா…
குடிச்சிட்டே இருப்பேன்…
என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா…
ஹா ஹஹஹஹா…

ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்…
ஓயாமல் இசைக்கின்றது…
இரு கண்ணிலும் உன் ஞாபகம்…
உறங்காமல் இருக்கின்றது…

ஆண் : பாசங்களும் பந்தங்களும்…
பிரித்தாலும் பிரியாதது… ஹா ஹாஆ…
காலங்களும் நேரங்களும்…
கலைத்தாலும் கலையாதது… ஹ ஹஹஹஹா…


Notes : Oru Jeevan Song Lyrics in Tamil. This Song from Naan Adimai Illai (1986). Song Lyrics penned by Vairamuthu. ஒரு ஜீவன்தான் பாடல் வரிகள்.


Scroll to Top