கொஞ்சம் உளறிக் கொட்டவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ்எம்.எம். கீரவாணிநான் ஈ

Konjam Olari Kottava Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொஞ்சம் உளறிக் கொட்டவா…
கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா…
கொஞ்சம் வாயை மூடவா…
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா…

ஆண் : கொஞ்சம் வழியை கேட்டேன்…
அடி கொஞ்சம் கொஞ்சம்…
வலிகள் தருகிறாய்… ஓ ஓஹோ ஓ…

ஆண் : நீ திரைகள் மாட்டினால்…
உள் அறைகள் பூட்டினால்…
உன் இதயமூளையில் நானே இருப்பேன்…

ஆண் : நீ திரைகள் மாட்டினால்…
உள் அறைகள் பூட்டினால்…
உன் இதயமூளையில் நானே இருப்பேன்…

—BGM—

ஆண் : கொஞ்சம் உள்ளம் சிந்திடு…
கொஞ்சம் கொஞ்சம் என்னுள் வந்திடு…
கொஞ்சம் பார்வை வீசிடு…
கொஞ்சம் கொஞ்சம் உண்மை பேசிடு…

ஆண் : கொஞ்சம் திறக்க சொன்னேன்…
அடி கொஞ்சம் கொஞ்சம்…
மறைக்க பார்க்கிறாய்… ஓ ஓஹோ ஓ…

ஆண் : ஹே… கஞ்ச வஞ்சியே…
உன் நெஞ்சில் ஏன் தடை…
இப்போலி வேலியை இன்றாவது உடை…

ஆண் : ஹே… கஞ்ச வஞ்சியே…
உன் நெஞ்சில் ஏன் தடை…
இப்போலி வேலியை இன்றாவது உடை…

—BGM—

ஆண் : காக்கை தூது அனுப்பிடு…
காற்றாய் வந்து உன் கூந்தல் கோதுவேன்…
ரெக்கை ஏதும் இன்றியும்…
தூக்கி கொண்டு விண்ணில் ஏறுவேன்…

ஆண் : இன்னும் ஜென்மம் கொண்டால்…
உன் கண்முன் தோன்றி…
இம்சை பண்ணுவேன்… ஓ ஓ ஹோ…

ஆண் : என் இதயக் கூட்டிலே…
உன் இதயம் கோர்க்க வா…
ஈருயிரை சேர்க்க வா…
ஒன்றாகிட வா…

பெண் : வாட் டிட் யூ சே…

ஆண் : என் இதயக் கூட்டிலே…
உன் இதயம் கோர்க்க வா…
ஈருயிரை சேர்க்க வா…
ஒன்றாகிட வா…

—BGM—


Notes : Konjam Olari Kottava Song Lyrics in Tamil. This Song from Naan Ee (2012). Song Lyrics penned by Madhan Karky. கொஞ்சம் உளறிக் கொட்டவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading