அங்கே சிரிப்பவர்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்ரிக்‌ஷாக்காரன்

Angey Sirippavargal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…

—BGM—

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…

ஆண் : நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்…
நாள் வரும்போது…
அன்று சிரிப்பது யார் அழுவது யார்…
தெரியும் அப்போது…

ஆண் : நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும்…
நாள் வரும்போது…
அன்று சிரிப்பது யார் அழுவது யார்…
தெரியும் அப்போது…

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
ஆணவ சிரிப்பு…

—BGM—

ஆண் : வயிறு வலிக்க சிரிப்பவர்கள்…
மனித ஜாதி…
பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள்…
மிருக ஜாதி…

ஆண் : வயிறு வலிக்க சிரிப்பவர்கள்…
மனித ஜாதி…
பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள்…
மிருக ஜாதி…

ஆண் : மனிதன் என்ற போர்வையில்…
மிருகம் வாழும் நாட்டிலே…

ஆண் : நீதி என்றும் நேர்மை என்றும்…
எழுதி வைப்பார் ஏட்டிலே…
எழுதி வைப்பார் ஏட்டிலே…

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…

—BGM—

ஆண் : நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா…
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா…
நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா…
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா…

ஆண் : தர்ம தாயின் பிள்ளைகள்…
தாயின் கண்ணை மறைப்பதா…

ஆண் : உண்மை தன்னை ஊமையாக்கி…
தலைகுனிய வைப்பதா…
தலைகுனிய வைப்பதா…

ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
ஆணவ சிரிப்பு…

—BGM—

ஆண் : தோட்டம் காக்க போட்ட வேலி…
பயிரை தின்றதோ…
அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல்…
பார்த்து நிப்பதோ…

ஆண் : தோட்டம் காக்க போட்ட வேலி…
பயிரை தின்றதோ…
அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல்…
பார்த்து நிப்பதோ…

ஆண் : நான் ஒரு கை பார்க்கிறேன்…
நேரம் வரும் கேட்கிறேன்…
பூனை அல்ல புலிதான் என்று…
போக போக காட்டுகிறேன்…
போக போக காட்டுகிறேன்…


Notes : Angey Sirippavargal Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. அங்கே சிரிப்பவர்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading