குங்கும பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித் & சின்மயியுவன் ஷங்கர் ராஜாகேடி

Kunguma Poove Song Lyrics in Tamil


குழு : சிவக்க சிவக்க பட்டு சேலை…
சிரிக்க சிரிக்க நிக்குதே…
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை…
மனசு சேத்து வைக்குதே…

—BGM—

ஆண் : குங்கும பூவே…
மஞ்சள் நிலாவே…
காதலின் கனவே…
திருமண உறவே…

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள்… ஹே…
உல்லாச வெடி வெடிச்சாச்சு…
பஞ்சவர்ண குயிலுக்கு… …
அந்த வானவில்லும் கெடச்சாச்சு…

பெண் : இதம் ஒரு கையில்…
சுகம் ஒரு கையில்…
நடுவிலே தங்கை உள்ளத்தில் பேரானந்தம்…

ஆண் : பிரிவொரு கண்ணில்…
உறவொரு கண்ணில்…
இரண்டிலும் அண்ணன் நெஞ்சம்தான் மெல்ல தடுமாறும்…

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள்… ஹே…
உல்லாச வெடி வெடிச்சாச்சு…
பஞ்சவர்ண குயிலுக்கு… ஓ…
அந்த வானவில்லும் கெடச்சாச்சு…

குழு : சிவக்க சிவக்க பட்டு சேலை…
சிரிக்க சிரிக்க நிக்குதே… ஹேய்…
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை…
மனசு சேத்து வைக்குதே… ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : தெய்வங்கள் வாழ்த்துமே உன்னைதான் இன்றைக்கு…
பெண் : சொந்தங்கள் சூழவே சென்றாய் மேடைக்கு…

ஆண் : அண்ணன்தான் ஆசையாய் செய்த பொன் சிலையே…
பெண் : மாங்கல்யம் சூடினால் நீயும் தேவதையே…

ஆண் : நாளை நீ வேறொரு இல்லத்தில்…
சேவைகள் செய்யும் நேரத்தில்…

பெண் : எத்தனை இன்ப சுமைகள்…
தோன்றும் நெஞ்சத்தில்…

ஆண் : கார்த்திகை தீபம் மனமாக…
பெண் : மார்கழி கோலம் முகமாக…
ஆண் : நீ ஒரு இல்ல தரசி ஆகும் நாளாக… ஓ ஹோ…

ஆண் : குங்கும பூவே…
மஞ்சள் நிலாவே…
காதலின் கனவே…
திருமண உறவே…

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள்… ஹே…
உல்லாச வெடி வெடிச்சாச்சு…
பஞ்சவர்ண குயிலுக்கு… ஓ…
அந்த வானவில்லும் கெடச்சாச்சு…

—BGM—

ஆண் : பாசத்தின் மழையிலே நனைந்தாய் இந்தனை நாள்…
பெண் : முத்தத்தின் கலையிலே நனையும் திருமண நாள்…

ஆண் : ஆசைகள் ஆடையை தாண்டி வரும் நேரம்…
பெண் : ஆண்மகனில் பார்வைகள் உன்னை தொடும் நேரம்…

ஆண் : நாளை உன் வயிற்றில் பூ பூக்கும்…
அதுவும் ஒரு ஆணாய் இருந்தாலே…

பெண் : மாமனின் மடியில் தூங்கி மகனாய் வாழாதா…

ஆண் : அண்ணனின் மகளும் வந்தாலே…
பெண் : அத்தையும் உன் மகனை கேட்டாலே…
ஆண் : இன்னொரு ஜென்மத்துக்கும் சொந்தம் தோன்றாதா… ஓ ஹோ…

ஆண் : குங்கும பூவே…
மஞ்சள் நிலாவே…
காதலின் கனவே…
திருமண உறவே…

குழு : மொட்டுவிட்ட மனசுக்குள்… ஹே…
உல்லாச வெடி வெடிச்சாச்சு…
பஞ்சவர்ண குயிலுக்கு… ஓ…
அந்த வானவில்லும் கெடச்சாச்சு…

குழு : சிவக்க சிவக்க பட்டு சேலை…
சிரிக்க சிரிக்க நிக்குதே…
ஜொலிக்க ஜொலிக்க மனமாலை…
மனசு சேத்து வைக்குதே…


Notes : Kunguma Poove Song Lyrics in Tamil. This Song from Kedi (2006). Song Lyrics penned by Pa. Vijay. குங்கும பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading