Category Archives: சிட்டுக்குருவி 

அடடடா மாமரக்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாசிட்டுக்குருவி

Adada Maamara Kiliye Song Lyrics in Tamil


BGM

பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…

BGM

பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…

BGM

பெண் : உன்னை நினைச்சேன்…
மஞ்சள் அறைச்சேன்…
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்…
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு…

BGM

பெண் : உன்னை நினைச்சேன்…
மஞ்சள் அறைச்சேன்…
மாசக் கணக்கா பூசி குளிச்சேன்…
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு…

பெண் : அடடடா மாதுளம் கனியே…
இத இன்னும் நீ நினைக்கலையே…
கிட்ட வாயேன் கொத்தி போயேன்…
உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…

BGM

பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்…
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்…
அட பரிசம்தான் போட்டாச்சு…
பாக்கு மாத்தியாச்சு…

BGM

பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்…
உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்…
அட பரிசம்தான் போட்டாச்சு…
பாக்கு மாத்தியாச்சு…

பெண் : அடடடா தாமரைக் கொடியே…
இது உன் தோள் தொடலையே…
செல்லக்கண்ணு சின்ன பொண்ணு…
இத நீ நினைக்கலையே அணைக்கலையே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…

BGM

பெண் : மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு…
நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு…
அட உன்னைத்தான் நான் பிடிக்க…
கண்வலைய போட்டேன்…

பெண் : அடடடா மம்முத கணையே…
வந்து வந்து மயக்குது எனையே…
இந்த ஏக்கம் ஏது தூக்கம்…
பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…

பெண் : அடடடா மாமரக்கிளியே…


Notes : Adada Maamara Kiliye Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. அடடடா மாமரக்கிளியே பாடல் வரிகள்.


உன்ன நம்பி நெத்தியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாசிட்டுக்குருவி

Unna Nambi Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…

BGM

பெண் : நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்…
ஊர்கூட உன்ன நம்பி இருக்குது ராசா…
நீருருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்…
ஊர்கூட உன்ன நம்பி இருக்குது ராசா…

பெண் : ஒன்னாரு எனக்கு கண்ணாரு…
உன்னத்தான் எண்ணி இந்த கன்னி…
ஒரு சிந்து படிச்சேனே…
உன்னத்தான் காணாக் கண்டு…
கண்ணு முழிச்சேனே…

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…

BGM

பெண் : வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர…
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா…
வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர…
சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா…

பெண் : சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்…
அந்தக் கதை அப்போ அட இப்போ…
நம்ம சொந்தக் கதை சொல்லு…
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு…

பெண் : உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

பெண் : நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த…
புரிஞ்சிக்க ராசா…
விட்டுப் போனா உதிர்ந்து போகும்…
வாசனை ரோசா…


Notes : Unna Nambi Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. உன்ன நம்பி நெத்தியிலே பாடல் வரிகள்.


En Kanmani Song Lyrics in Tamil

என் கண்மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாசிட்டுக்குருவி 

En Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…

ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ…

பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…

ஆண் : என் கண்மணி…

BGM

ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா…
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா…

பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்…
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்…

ஆண் : இளமா மயில்…
பெண் : அருகாமையில்…

ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று…
அனுபவம் சொல்லவில்லையோ…

ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ…

பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…

ஆண் : என் கண்மணி…

BGM

ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு…

ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே…
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே…

பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே…
அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே…

ஆண் : இரு தோளிலும் மணமாலைகள்…

பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று…
தவிக்கின்ற தவிப்பென்னவோ…

ஆண் : என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…

பெண் : என் மன்னவன் உன் காதலன்…
எனை பார்த்ததும் ஓராயிரம்…
கதை சொல்கிறான்… கதை சொல்கிறான்…
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ…
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ…

ஆண் : என் கண்மணி…


Notes : En Kanmani Song Lyrics in Tamil. This Song from Chittu Kuruvi (1978). Song Lyrics penned by Vaali. என் கண்மணி பாடல் வரிகள்.