ஏதேதோ எண்ணங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜா & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாபட்டியல்

Yedhedho Ennangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுது…
வழி தேடி மனசுக்குள் வந்து…
வருகை பதிவு செய்தது…

ஆண் : அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது…
அசைந்தது அடி மனம் அசைந்தது பார்…

ஆண் : மிதந்தது மிதந்தது விரல் என மிதந்தது…
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்…

ஆண் : புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது…
தெளிந்தது உயிர் வரை தெளிந்தது பார்…

ஆண் : ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுது…
வழி தேடி மனசுக்குள் வந்து…
வருகை பதிவு செய்தது…

BGM

ஆண் : பழகிய ருசியே பழகிய பசியே…
உயிரில் உன் வாசம்…

பெண் : நெருங்கிய கனவே நொறுங்கிய கனவே…
உதட்டில் உன் சுவாசம்…

ஆண் : விரலில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே…
காலில்லா காற்று தான் என்னை தேடி தடவியதே…
சிறகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே…
நகமில்லா இரவுகள் என்னை மட்டும் கீறியதே…

ஆண் : முதல் முறை தெரிந்தது முதல் முறை புரிந்தது…
முதல் முறை திறந்தது தனி உறவு…
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்…
இது ஒரு அவசியம் புது உணர்வு…

ஆண் : ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுது…
வழி தேடி மனசுக்குள் வந்து…
வருகை பதிவு செய்தது…

BGM

ஆண் : கவனத்தே மறந்தேன் கவனத்தே மறந்தேன்…
உனக்குள் விழுந்திடவே…

பெண் : இமைகளை திறந்தேன் இமைகளை திறந்தேன்…
உடனே பறந்திடவே…

ஆண் : யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே…
நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே…
திரும்பாமல் போனால் பாதி ஜீவன் தேய்ந்திடுமே…
விரும்பாமல் போனால் மொத்த ஜீவன் சாய்ந்திடுமே…

ஆண் : அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது…
அசைந்தது அடி மனம் அசைந்தது பார்…

ஆண் : மிதந்தது மிதந்தது விரல் என மிதந்தது…
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்…

ஆண் : புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது…
தெளிந்தது உயிர் வரை தெளிந்தது பார்…

ஆண் : அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது…
அசைந்தது அடி மனம் அசைந்தது பார்…

ஆண் : மிதந்தது மிதந்தது விரல் என மிதந்தது…
வளர்ந்தது இரு இமை வளர்ந்தது பார்…

ஆண் : ஏதேதோ எண்ணங்கள் வந்து…
எனக்குள் தூக்கம் போடுதே…


Notes : Yedhedho Ennangal Song Lyrics in Tamil. This Song from Pattiyal (2006). Song Lyrics penned by Pa. Vijay. ஏதேதோ எண்ணங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top