கவிதையே தெரியுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஆர்.பி. பட்நாயக், ஹரிணி & மாணிக்க விநாயகம்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kavithayae Theriyuma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி…
இமை மூட மறுக்கின்றதே ஆவலே…
இதழ் சொல்ல துடிக்கின்றதே…
குழு : காதலே…

ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…
கவிதையே தெரியுமா…

—BGM—

பெண் : குறும்பில் வளர்ந்த உறவே…
என் அறையில் நுழைந்த திமிரே…

ஆண் : மனதை பறித்த கொலுசே…
என் மடியில் விழுந்த பரிசே…

பெண் : ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து…
என்னை தாலாட்டுதே…

ஆண் : வானம் காணாத வெண்ணிலவொன்று…
மோக பாலூட்டுதே…

பெண் : நாணம் பொய் நீட்டுதே… ஹே ஹே…

ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…
கவிதையே தெரியுமா…

—BGM—

ஆண் : தகிட ததுமி தகிட ததுமி தந்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…

—BGM—

ஆண் : உயிரில் இறங்கி வரவா…
உன் உடலில் கரைந்து விடவா…

பெண் : உறக்கம் திறக்கும் திருடா…
என் கனவில் பதுங்கி இருடா…

ஆண் : புடவையாய் மாறி பொன் உடல் மூடி…
உன்னுடன் வாழவா…

பெண் : இருவரின் ஆடை இமைகளே ஆக…
இரவை நாம் ஆளவா…

ஆண் : வேர்வை குடை தேடவா… ஆஹாஹா… ஹா ஹா…
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…

பெண் : இதயமே தெரியுமா உனக்காகவே நானடா…

ஆண் : இமை மூட மறுக்கின்றதே…
குழு : காதலே…

ஆண் & பெண் : இதழ் சொல்ல துடிக்கின்றதே…
குழு : காதலே…

—BGM—


Notes : Kavithayae Theriyuma Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Arivumathi. கவிதையே தெரியுமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading