கோடி கோடி மின்னல்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்ஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Kodi Kodi Minnalgal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…

ஆண் : மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா…
இளைய மனதில் காதல் பிறந்த நேரமா…

ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…

—BGM—

ஆண் : சாரல் விழும் நேரம் வானவில்லை போலே…
தோன்றிடும் அழகான காதல்…
ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும்…
இளமையின் சங்கீதம் காதல்…

ஆண் : ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக…
இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா…
பழகு பாதம் பார்த்து அவள் சுப்ரபாதம் பாட…
சினுங்கும் கொலுசு ஸ்ருதி சேர்க்குமா…

ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…

—BGM—

ஆண் : ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி…
வைத்ததோ நெஞ்சோடு இன்று…
தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்…
கலந்தது மூச்சோடு இன்று…

ஆண் : காதல் என்னும் வார்த்தை…
அது வார்த்தை அல்ல வாழ்க்கை…
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா…

ஆண் : இணைய வேண்டும் மனது…
இது இறைவன் செய்த முடிவு…
மாற்றி கொள்ள மாலை வேண்டுமா…

ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…

ஆண் : மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா…
இளைய மனதில் காதல் பிறந்த நேரமா…

ஆண் : கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…
ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே…
ஏனடி ஏனடி ஏனடி…


Notes : Kodi Kodi Minnalgal Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. கோடி கோடி மின்னல்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading