திருவிழான்னு வந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, கவுரி, ராஜா & ரவிஆர்.பி. பட்நாயக்ஜெயம்

Thiruvizhannu Vandha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…

—BGM—

ஆண் : ஹே… திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா…
அரிச்ச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா…
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோவ ப‌ட‌மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

குழு : என்ன‌ என்ன‌ என்ன‌…

ஆண் : நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…
நான் உட்ட‌தெல்லாம் ரீலு…

ஆண் : வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே…
வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே…
ஹே… வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே…
வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே…

—BGM—

ஆண் : ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா…
க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா…
டென்ட் கொட்டா போல இவ பிலிம்மு காட்ட மாட்டா…
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…

குழு : சொல்லுடா சொல்லு…

ஆண் : நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…
நான் உட்ட‌தெல்லாம் ரீலு…

ஆண் : சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே…
சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே…
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே…
சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே…

ஆண் : புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வாரா…
காதுல வைக்க பூவு கோயில வைக்க பழம்…
என்ன பழம் அந்த பழம்…
நல்லா பாா்த்து சொல்லுடா ஞானப்பழம்…

ஆண் : ஆரஞ்சுபழம் ஆப்பிள் பழம்…
திராட்சைபழம் பேரீச்சம் பழம்…
சீதாபழம் கொய்யாபழம்…
மாம்பழம் மாதுளம்பழம்…
பலாபழம் வாழைபழம்…

ஆண் : தோடி… ஆச வச்ச ராசா…
நான் மீச வச்ச ரோசா…
சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா…

குழு : அஞ்சு பேரு நாங்க…
அதில் ஒருத்தன் மட்டும் எங்க…
எங்க கூட ஆட வாங்க…
எங்க கூட ஆட வாங்க…
அட இல்லாக்காட்டி போங்க…

பெண் : போயா போயா போயா போயா…
வேலையதான் பாத்துகிட்டு போயா போயா…

ஆண் : ஹே… பேச மாட்டேன்னு சொன்ன‌வளே…
பேசி பேசி போறியே சின்ன‌வ‌ளே…

—BGM—

ஆண் : மீன போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா…
மான போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா…
மயில போல அழகு இவ இறக போட மாட்டா…

ஆண் : இன்னொரு விஷ‌ய‌ம் கேளு…
இதுவும் ரீல் தானடா…
இது ரீலு இல்ல ரியலு…

ஆண் : கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே…
கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே…
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே…
கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே…

—BGM—


Notes : Thiruvizhannu Vandha Song Lyrics in Tamil. This Song from Jayam (2002). Song Lyrics penned by Na. Muthukumar. திருவிழான்னு வந்தா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading