கதைகளை பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல் & ஹம்சிகா ஐயர்ஜி. வி. பிரகாஷ் குமார்அங்காடித் தெரு

Kadhaigalai Pesum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…

ஆண் : கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

—BGM—

பெண் : கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது…
வருகிற வாசனை நீயல்லவா…

ஆண் : உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும்…
சர்க்கரை தடவிய நொடியல்லவா…

பெண் : கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை…
ஆண் : ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை…

பெண் : வெறும் கரையில் படுத்துக்கொண்டு…
விண்மீன் பார்ப்பது யோகமடா…

ஆண் : உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும்…
தேவை இல்லையடி…

—BGM—

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

—BGM—

பெண் : உனக்குள் தொடங்கி உனக்குள்தானே…
எந்தன் உலகம் முடிகிறதே…

ஆண் : உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே…
எந்தன் நாட்கள் விடிகிறதே…

பெண் : ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்…
ஆண் : ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம்…

பெண் : நேற்றென்னும் சோகம்…
நெருப்பாய் வந்து தீ மூட்டும்…

ஆண் : இன்றென்னும் மழையில்…
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே…

—BGM—

ஆண் : ஓ கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…

ஆண் : ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…

பெண் : ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல்…
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே…


Notes : Kadhaigalai Pesum Song Lyrics in Tamil. This Song from Angadi Theru (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கதைகளை பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading