செல்லமே இது இரவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & சுனிதா சாரதிநிருகலாபக் காதலன்

Chellame Idhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செல்லமே இது இரவா பகலா…
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா…
உயிரைத் தின்னும் காதல் தீயே…
இனிய கொடுமை நீயே நீயே…

—BGM—

பெண் : கொட்டும் வேர்வை அட்சதையாக…
கொள்ளை அழகு வெற்றிலையாக…
மென்று விடுவேன் இதழ்கள் ஊற…
உடலும் உயிரும் வேக வேக…

—BGM—

ஆண் : இரவு கருகிட அரும்ப வேண்டும்…
இதயம் உருகிட விரும்ப வேண்டும்…
நாணம் முழுவதும் தீர தீண்ட வா… ஆஆ…
பெண் : தீ தீண்ட வா…

—BGM—

ஆண் : அழகுக்கு நீயோர் அகராதி போல…
அதன் அர்த்தம் யாவும்…
நான் அறிந்து கொள்ள வேண்டும்… ம்ஹ்ம்ம்…

பெண் : இவளுக்கு நீ ஓர் மருதாணி போல…
உடல் எங்கும் பூசு…
நான் உயிர் சிவக்க வேண்டும்… ம்ம்ம்…

ஆண் : உடைகளை உடைத்தால் புது வெள்ளம் இங்கு பாயுமே…
பெண் : கரைவழி எல்லாம் தடை இன்றி இன்பம் சேருமே…
ஆண் : செய்முறை நேரம் விளக்கம் ஏன் வேண்டாமே…

ஆண் & பெண் : செல்லமே இது இரவா பகலா…
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா…
உயிரைத் தின்னும் காதல் தீயே…
ஆண் : இனிய கொடுமை நீயே…

—BGM—

ஆண் : ஒரு நூறு பெண்கள் உருவாக்கும் போதை…
உன்னிடம்தானே நான் பருகப் பருக வேண்டும்… ஹ்ம்ம்…

பெண் : உன்னைச் சேரும் நேரம் உயிர் போக வேண்டும்…
போனாலும் நானே உன் நினைவில் வாழ வேண்டும்… ம்ம்…

ஆண் : தருவதைத் தந்தால் தவறில்லை இங்கு ஏதுமே…
பெண் : இடைவெளி எல்லாம் இனியில்லை எந்த நாளுமே…
ஆண் : நரை தொட்ட போதும் முடிவே ஏன் வேண்டாமே…

பெண் : செல்லமே இது இரவா பகலா…
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா…
உயிரைத் தின்னும் காதல் தீயே…
இனிய கொடுமை நீயே நீயே…

—BGM—


Notes : Chellame Idhu Song Lyrics in Tamil. This Song from Kalabha Kadhalan (2006). Song Lyrics penned by Yugabharathi. செல்லமே இது இரவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading