மண்மீது ஆண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & சுனிதா சாரதிநிருகலாபக் காதலன்

Manmeethu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா…
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா…
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா…
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா…

ஆண் : விஷம் உடனே கொல்லும்…
விதி விட்டு விட்டு கொல்லும்…
வழி முழுவதும் பள்ளம்…
பதைபடுதே உள்ளம்…

ஆண் : அடி மனதில் ஆடிடும் பேய்கள் அடங்கிடுமா…

—BGM—

ஆண் : கண்ணை மூடியே கொஞ்சம் படுத்தால்…
பொல்லாத கனவுகள் தோன்றிடுதே…
என்னை எடுத்து எட்டாய் மடித்து…
தீராத சோதனை தின்றிடுதே…

ஆண் : நதியினிலே இலை விழுந்தால்…
சின்னஞ்சிறிய அலை எழுமே…
சலனம் என்று அதை நினைத்தால்…
கண் இரண்டு குற்றமே…

—BGM—

ஆண் : கண்ணாடியிலே விழும் உருவம்…
கண்ணாடி அதற்கு சொந்தம் இல்லை…
உறவினிலும் விதிகள் உண்டு…
வழி மாறிப் போனால் பயணம் இல்லை…

ஆண் : தவறு செய்ய மறுக்கும் மனம்…
தவறு என்றால் என்ன செய்வேன்…
தவறி வந்து நீ விழுந்தால்…
விழைவுகள் துயரமே தொடருமே…

—BGM—

ஆண் : மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா…
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா…
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா…
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா…

ஆண் : விஷம் உடனே கொல்லும்…
விதி விட்டு விட்டு கொல்லும்…
வழி முழுவதும் பள்ளம்…
பதைபடுதே உள்ளம்…

ஆண் : அடி மனதில் ஆடிடும் பேய்கள் அடங்கிடுமா…


Notes : Manmeethu Song Lyrics in Tamil. This Song from Kalabha Kadhalan (2006). Song Lyrics penned by Yugabharathi. மண்மீது ஆண்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading