கிறு கிறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & பாப் ஷாலினிஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Kiru Kiru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
பெண் : கெறங்குற நொறுங்குற…

ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
பெண் : முழிக்கிற இழுக்கற…

ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன்…
நான் தீ கோழியா துடிக்கிறேன்…
பெண் : தவிக்கிற துடிக்கிற…

ஆண் : விக்கி விக்கி வழுகிறேன்…
நான் வில்ல போல வளையுறேன்…
பெண் : வழுக்கற வளையற…

—BGM—

ஆண் : குறுக்கும் நெடுக்கும் பாத்து பாத்து…
கிறுக்கு புடிச்சு அலையுறேன்…
குலுக்கி போட்ட சோழிய போல…
கண்ணு அடிச்சு சொருகுறேன்…
பெண் : அலையுற சொருகுற…

ஆண் : முறுக்கி வச்ச தாம்பு கயிற…
மடங்கி மடங்கி மருகுறேன்…
மந்திரிச்ச ஆட்ட போல…
எந்திரிச்சு மொணங்குறேன்…
பெண் : மருகுற மொணங்குற…

ஆண் : ஈரவானம் மேல ஏறும் எலி போல நொலையுறேன்…
திரை போட்டு தங்க சிலைய திருடத்தானே திரியுறேன்…
பெண் : நொழையுற திரியுற…

—BGM—

ஆண் : கொட்ட கொட்ட கண் முழிச்சு ஆந்த போல ஏங்குறேன்…
கிட்ட தட்ட வௌவாலாக தலை கீழாக தொங்குறேன்…
பெண் : ஏங்குற தொங்குற…

ஆண் : குட்டி போட்ட பூன போல…
கூச்சம் விட்டு சிணுங்குறேன்…
பூட்டு போட்ட பொட்டிய போல…
பத்திரமாக பதுங்குறேன்…
பெண் : சிணுங்குற பதுங்குற…

ஆண் : நீ சிரிக்கும் நேரம் பாத்து…
பசியினு கெஞ்சுறேன்…
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா…
பாத்திரத்த முழுங்குறேன்…
பெண் : கெஞ்சுற முழுங்குற…

ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…

—BGM—

ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…

—BGM—

ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன்…
நான் தீ கோழியா துடிக்கிறேன்…

—BGM—

ஆண் : விக்கி விக்கி வழுகிறேன்…
நான் வில்ல போல வளையுறேன்…

—BGM—


Notes : Kiru Kiru Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. கிறு கிறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading