யாரோ யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Yaaro Yaaro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…

ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ…
காலம் தாண்டி செல்வாயோ…
கண்ணீர் விட்டு கரையும்…
என்னை காப்பாயோ…

ஆண் : இது கனவா கனவா…
இல்லை நெனவா நெனவா…
இது கணவாய் இருந்தால்…
கலைந்தே போகும் போகட்டும்…

ஆண் : இது நிழலா நிழலா…
இல்லை ஒளியா ஒளியா…
இது நிழலாய் இருந்தால்…
இருளில் கரைந்தே மறையட்டும்…

ஆண் : ஹோ… யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…

—BGM—

ஆண் : முதல் முறை இங்கு நீ இன்றி…
நடக்கிறேன் தனியாக…
இறந்தும் உன் மூச்சு காற்றை…
உணர்கிறேன் இதமாக…

ஆண் : சரிபாதி இரவும் பகலும்…
என்கூறியே உலகம் சுழலும்…
ஒரு பாதியே பிரிந்தே…
போனால் என்னாகும்…

ஆண் : நினைவால் இனி நான் வாழ…
நதி போல் இனி நாள் போக…
எதனால் இனி ஆறும் ஆறும்…
என் காயம்…

ஆண் : யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…

—BGM—

ஆண் : கனாக்களில் வரும் பெண் பின்பம்…
திகைக்கிறேன் யார் என்று…
முகத்திரை அதை தள்ளி பார்த்தால்…
முறைக்கிறாய் நீ நின்று…

ஆண் : கனகாம்பர இதழை விரித்து…
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து…
திரும்பாமலே நடந்தால் சென்றால்…
எது மிஞ்சும்…

ஆண் : நிறமாலையை போல் நெஞ்சம்…
நெளிந்தாடிடும் பல வண்ணம்…
உன்னை பார்த்ததும் பாராதது போல்…
சிறு வஞ்சம்…
உன்னை பார்த்ததும் பாராதது போல்…
சிறு வஞ்சம்…

ஆண் : யாரோ யாரோ நான் யாரோ…
உன்னை விட்டு நான் வேறோ…
தன்னந்தனியே நின்றால்…
என்னை ஏற்பாரோ…

ஆண் : காற்றே காற்றே சொல்வாயோ…
காலம் தாண்டி செல்வாயோ…
கண்ணீர் விட்டு கரையும்…
என்னை காப்பாயோ…

ஆண் : இது கனவா கனவா…
இல்லை நெனவா நெனவா…
இது கணவாய் இருந்தால்…
கலைந்தே போகும் போகட்டும்…

ஆண் : இது நிழலா நிழலா…
இல்லை ஒளியா ஒளியா…
இது நிழலாய் இருந்தால்…
இருளில் கரைந்தே மறையட்டும்…


Notes : Yaaro Yaaro Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Thamarai. யாரோ யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading