லஜ்ஜாவதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஜெஸ்ஸி கிப்ட்ஜெஸ்ஸி கிப்ட்4 ஸ்டூடண்ட்ஸ்

Lajjavathiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
ராட்சசியோ தேவதையோ…
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ…
அடை மழையோ அனல் வெயிலோ…
ரெண்டும் சேர்ந்த கண்ணோ…

ஆண் : தொட்டவுடன் ஓடுறீயே…
தொட்டவுடன் ஓடுறீயே…
ஹே… தொட்டாச்சிணுங்கி பெண்தானோ…
ஹே… தொட்டாச்சிணுங்கி பெண்தானோ…
அழகினாலே அடிமையாக்கும்…
ராஜ ராஜ ராணி…

ஆண் : அடி லஜ்ஜாவதியே…
என்ன அசத்துற ரதியே…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…

—BGM—

ஆண் : பூவரச இலையிலே…
பீப்பீ செஞ்சி ஊதினோம்…
பள்ளிக்கூடம் பாடம் மறந்து…
பட்டாம்பூச்சி தேடினோம்…
தண்ணிப்பாம்பு வரப்பில் வர…
தலை தெறிக்க ஓடினோம்…

ஆண் : பனங்காயின் வண்டியில்…
பசு மாட்டு தொழுவத்தை…
சுற்றி வந்து பாம்பேக்கு…
போனதாக சொல்லினோம்…

ஆண் : அடடா வசந்தம்…
அதுதான் வசந்தம்…
மீண்டும் அந்த காலம் வந்து…
மழலையாக மாற்றுமா…

—BGM—

ஆண் : லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…

—BGM—

ஆண் : காவேரி நதியிலே…
தூண்டில்கள் போட்டதும்…
கண்ணே உன் தூண்டில் முள்ளில்…
குட்டி தவளை விழுந்ததும்…
கை கொட்டி கேலி செய்த…
ஞாபகங்கள் மறக்குமா…

ஆண் : கட்ட வண்டி மையினால்…
கட்ட பொம்மன் மீசையை…
கண்ணே நீ வரைந்து விட்டு…
ராஜ ராஜன் என்றதும்…

ஆண் : அடடா வசந்தம்…
அதுதான் வசந்தம்…
காலம் கடந்து போன பின்னும்…
காதல் கடந்து போகுமா…

—BGM—

ஆண் : லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
ராட்சசியோ தேவதையோ…
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ…
அடை மழையோ அனல் வெயிலோ…
ரெண்டும் சேர்ந்த கண்ணோ…

ஆண் : தொட்டவுடன் ஓடுறீயே… ஹே…
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ…
அழகினாலே அடிமையாக்கும்…
ராஜ ராஜ ராணி…

ஆண் : லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே…


Notes : Lajjavathiye Song Lyrics in Tamil. This Song from 4 Students (2004). Song Lyrics penned by Pazhani Bharathi. லஜ்ஜாவதியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading