நானி கோனி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ரேயா கோஷல் & ஷேகினா ஷான் ஜசீல்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Naani Koni Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…

—BGM—

ஆண் : யேகோவா… நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…

ஆண் : மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…
நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…

ஆண் : ஓா் ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்… யேகோவா…

ஆண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்…
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்…
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்…
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…

பெண் : நானி கோனி ராணி…
எந்தன் மேனி ஏனோ மொய்க்கிறாய்…
மருதாணி பூத்த கானி…
என்னை தா நீ என்று கேட்கிறாய்…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்…

பெண் : நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்…
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்…
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேராய்…
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…

—BGM—

ஆண் : ஒரு காலை நேரம் நீ வந்தாலே…
பனி வீசும் காற்றுக்கு…
பணியாமல் தேகம் சூடேறும்…

ஆண் : கண் பேசும் மௌனமே ஒன்றாக…
நாம் போகும் சாலைகள்…
முடியாமல் எங்கெங்கோ நீளும்…

பெண் : நதியிலே இலை போல பயணம்…
இனிப்பான தருணம்…
மனதோடு மாய மின்சாரம்…

பெண் : உன் எதிரே நனையாமல் கரைந்தேன்…
நகராமல் உறைந்தேன்…
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்…
உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்…

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்…

—BGM—

ஆண் : தொலைதூரம் போனதே என் மேகம்…
புரியாத மென்சோகம்…
முகில் மேலே ஊசி இறங்கும்…

ஆண் : ஹோ… பிரிவாலே இன்று நான் போராட…
விழியோரம் நீரோட…
அவன் கண்ணில் காதல் மயக்கம்…

ஆண் : உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில்…
எனைப்போலே சாயலில்…
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே…

ஆண் : நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்…
மெலிதான பூகம்பம்…
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்…
இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி…

ஆண் : நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று… ஏலாஹா…

பெண் : நீ தூரம் நின்றால் வோ்க்கிறேன்…
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்…
ஒரு ஏவல் ஆளாய் மாறினேன்…
என்னை எங்கே என்று தேடினேன்… ஏலாஹாஹா…

ஆண் : நீராய் நீராய்…
பெண் : ம்ம்ம்… நீ மேகம் தாண்டி வாராய்…

ஆண் : தாராய் தாராய்…
பெண் : என் தாகம் தூண்டி நூறாய்…

ஆண் : பாவாய் பாவாய்…
பெண் : நான் உன்னால் ஆனேன் தீவாய்…

ஆண் & பெண் : கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா…


Notes : Naani Koni Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Viveka. நானி கோனி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading