கால் முளைத்த பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர் & நின்சி வின்சென்ட்ஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…

பெண் : வால் முளைத்த காற்றே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

BGM

ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே…
மலர்களின் மமதை அழிந்ததே…
கடவுளின் கடமை முடிந்ததே…
அழகி நீ பிறந்த நொடியிலே…

பெண் : தலைகள் குனிந்ததோ…
மமதை அழிந்ததோ…
கடமை முடிந்ததோ…
பிறந்த நொடியிலே…

ஆண் : ஹே பெண்ணே… ஹே பெண்ணே…
உன் வளைவுகளில்…
தொலைவதுபோலே உணருகிறேன்…
இடையினிலே திணறுகிறேன்…
கனவிதுதானா வினவுகிறேன்…

BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

BGM

பெண் : இரவெலாம் நிலவு எரிகையில்…
திரிகளாய் விரல்கள் திரியுதே…
அருகிலே நெருங்கி வருகையில்…
இளகியே ஒழுக்கம் உருகுதே…

ஆண் : நிலவு எரிகையில்…
விரல்கள் திரியுதோ…
நெருங்கி வருகையில்…
ஒழுக்கம் உருகுதோ…

பெண் : எனை ஏனோ… எனை ஏனோ…
உருக்குகிறாய்…
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்…
இடைவெளியை சுருக்குகிறாய்…
இரக்கமே இன்றி இறுக்குகிறாய்…

BGM

ஆண் : கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…

பெண் : வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…

ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை…
உன் இதழ்களில் கண்டேனே…
சோவியத் ஓவியக் கவிதைகளை…
உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…

ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய…
இதய இடுக்கில் மழையை பொழிய…
உயிரை உரசி அனலை எழுப்ப…
எரியும் வெறியை தெறித்தாய்…


Notes : Kaal Mulaitha Poove Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Madhan Karky. கால் முளைத்த பூவே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top