களவாணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி. பிரசன்னா & சௌந்தர்யா பாலா நந்தகுமார்என்.ஆர். ரகுநந்தன்கொடிவீரன்

Kalavani Song Lyrics in Tamil


—BGM—

பெண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
வித தானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

ஆண் : மருதாணி வச்ச கன்னி…
மனசோட என்ன பின்னி…
முடிபோட சுகம் ஆச்சே…
ஐயோ அய்யய்யோ…

பெண் : மந்தையில ஆடாக…
முன்ன இருந்தேன்…
நான் மந்திரிச்ச ஆடாக…
இப்ப கவுந்தேன்…

ஆண் : இது மந்திரமா தந்திரமா…
சுந்தரியே சொல்லு சொல்லு…

பெண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
வித தானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

ஆண் : மருதாணி வச்ச கன்னி…
மனசோட என்ன பின்னி…
முடிபோட சுகம் ஆச்சே…
ஐயோ அய்யய்யோ…

—BGM—

ஆண் : புள்ளி வச்ச கோலம் வரும்…
என்று இருந்தேனே…
கோலம் நீயும் புள்ளி வச்சு…
தள்ளி போறாயே…

பெண் : ஆடி வந்தா காத்து வரும்…
என்று அறிவேனே…
காத்தா நீயும் ஆடி போக…
கண்ணு வச்சாயே…

ஆண் : முன்னால நீ வந்தாலே…
குத்து விளக்கு…
கீழ் வந்துடுதே தன்னாலே…
மீசை முறுக்கு…

பெண் : உன்ன கண்டதுமே…
சக்கரமா சுத்திடுதே…
நெஞ்சு நெஞ்சு…

ஆண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
விததானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

—BGM—

ஆண் : கூறு கத்தி ஊது பத்தி…
போல உருமாறி…
போனதென்ன நீயும் என்ன…
கண்டா பின்னாலே…

பெண் : பூமி பந்து கூட பந்து போல…
திசை மாரி…
போவதென்ன இப்ப நீயும்…
சொன்ன சொல்லாலே…

ஆண் : பக்கத்துல நீயும் வந்தா…
பத்தும் நெருப்பு…
ஏ… பத்த மட பாய் வாங்க…
சொல்லி அனுப்பு…

பெண் : காண கச்சிதமா கொல்லுறியே…
வெல்லுறியே என்ன என்ன…

பெண் : களவாணி உன்ன எண்ணி…
அனல் ஆச்சே பச்ச தண்ணி…
வித தானே மரமாச்சு…
ஐயோ அய்யய்யோ…

ஆண் : மருதாணி வச்ச கன்னி…
மனசோட என்ன பின்னி…
முடிபோட சுகம் ஆச்சே…
ஐயோ அய்யய்யோ…

பெண் : மந்தையில ஆடாக…
முன்ன இருந்தேன்…
நான் மந்திரிச்ச ஆடாக…
இப்ப கவுந்தேன்…

ஆண் : இது மந்திரமா தந்திரமா…
சுந்தரியே சொல்லு சொல்லு…

—BGM—


Notes : Kalavani Song Lyrics in Tamil. This Song from Kodiveeran (2017). Song Lyrics penned by Yugabharathi. களவாணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading