ஒரு தட்டான போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்சத்யபிரகாஷ் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜேக்ஸ் பெஜாய்மன்னர் வகையறா

Oru Thattana Pole Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

ஆண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டியே…

ஆண் : உன்னோட அழக உக்காந்து பழக…
என் பேரில் முழுசா எழுதிட்டியே…

ஆண் : நான் சித்து எறும்பா…
தரையில் நடக்கிறேன்…
உன்ன சக்கரையா…
தலையிலே சொமக்குறேன்…

ஆண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாக தானே…
நான் மிதந்தேனே…

—BGM—

ஆண் : காத்து பட்ட புழுதிய போல…
ஆசை பட்டு கெளம்புனேன் மேல…
தூறல்ல தூவுனேன்…
அடங்குனேன் கீழ…

பெண் : காஞ்சா மட்டை கடாமுடா பேச்ச…
கத்து வச்சி கேக்குற கிச்சான்…
குருவியா வந்து நீ…
எனக்கின்னு வாச்ச…

ஆண் : வெயிலோட மழையுமே சேர்ந்து அடிக்கும்…
அந்த அழகிய அதிசயம் போல…
எப்போ எப்போ கிட்ட கிட்ட நீ வருவேன்னு…
எண்ணி கிட்டு இருந்தேன் நாளா…

பெண் : அது எல்லாம் தெரிஞ்சிதானே…
உன் அருகில் வந்தேன் நானே…

ஆண் : ஒரு தட்டானா…
தட்டானா பறந்தேன்…
ஒரு சிட்டானா…
சிட்டானா மிதந்தேன்…

—BGM—

பெண் : ஆள விட்டு பாக்குற அழகா…
ஆத்தி இப்போ இனிக்குது மொளகா…
எப்படி இப்படி நீ என்னை மாத்துன…

ஆண் : ஆலங்கட்டி மழையை எரிஞ்சேன்…
ஆட்டு குட்டி கணக்கா திரிஞ்சேன்…
இலைய நீ நீட்டுனா…
தலைய நான் ஆட்டுவேன்…

பெண் : செக்க செக்க செவந்தேன்…
கண்ணும் கண்ணும்தான்…
என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : என்னை கூட்டி கொஞ்சோம்…
குலசேன் பார்த்தேன் என் நெஞ்ச…
மிச்சமாக நீயும் வந்து நின்ன…

ஆண் : மேல இருக்கவன் போட்டா கொடு…
என் நெஞ்சுதான் உனக்கு வீடு…

பெண் : ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாக தானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…

பெண் : கொஞ்சோண்டு பார்த்தேன்…
கொண்டானு கேட்டேன்…
இந்தான்னு மனச குடுத்துட்டேனே…
என்னோட அழக…
எப்போதும் பழக…
உன் பேரில் முழுசா எழுதிட்டேனே…

—BGM—


Notes : Oru Thattana Pole Song Lyrics in Tamil. This Song from Mannar Vagaiyara (2018). Song Lyrics penned by Mani Amuthavan. ஒரு தட்டான போல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading