விண்டேஜ் லவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஸ்டார்

Vintage Love Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இருவிழி பாதையில் காத்திருந்தேன்…
இந்த தாமதம் ஏனோ நிலவே…
தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன்…
என் கண்களில் இல்லை கனவே…

ஆண் : புல்வெளி கூட்டத்தில் நீ திரிந்தாய்…
ஒரு பூச்செடி போலே தனியே…
இடம் பொருள் யாவுமே மறந்துவிட்டேன்…
நீ எந்தன் உலகம் இனியே…

ஆண் : இவன் போலே ஒரு இன்பம் துன்பமோ ஓ யாரோ…
மதில் மேலே ஒரு பூனையாகிறேன் நானே…

ஆண் : நான் கடந்து போகும் நாட்குறிப்பில்…
மயிலின் இறகாய் நீ இருப்பாய்…
இமையின் இதழால் நீ சிரித்தாய்…
கண்ணில் கைதானேன்…

—BGM—

ஆண் : ஒருநாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ…
அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ…

ஆண் : வெண்ணிற மேகமும் தன்னாலே…
தூறலை பொழியுது உன்னாலே…
மீன்கள் கண்ணாலே…
தூண்டிலை திருடிப்போனாளே…

—BGM—

ஆண் : தனியே உன்னை காணும்போது…
தலைமேல் அந்த வானமேது…
விழியில் வந்து போனபோது…
ஒருவிளக்கம் சொல்ல வார்தையேது…

ஆண் : திரும்பும் எல்லாம் திசையானாய்…
தித்திக்கின்ற விஷமானாய்…
நினைவால் எந்தன் வசமானாய்…
நெஞ்சுக்கே இசையானாய்…

ஆண் : என் கைரேகையே உன் கூந்தல் கீறல்கள்தானே…
மறவேனே உயிர் வாழும் நாள் வரை…

ஆண் : ஏய்… எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே…
உன்னை முதல் முதல் பார்த்த நொடியே…
ரெட்ட கண்ணு கட்டிபோட கட்டம் கட்டுதே…
உன் முகவரி என்ன அடியே…

—BGM—


Notes : Vintage Love Song Lyrics in Tamil. This Song from Star (2023). Song Lyrics penned by Kabilan. விண்டேஜ் லவ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading