வாங்கும் பணத்துக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பாலசுப்ரமணியம்இளையராஜாதோனி

Vaangum Panathukkum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

ஆண் : எண்ணைய தேச்சு…
மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால…
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு…
கட்டணம் உண்டாடா…
இருப்பதுதான் போதும் என்பவன்…
ஒருத்தன் உண்டாடா…
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்…
பாத்தவன் உண்டா…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

—BGM—

ஆண் : அன்னைக்கும் இன்னைக்கும் என்னைக்கும்…
இந்த அன்னாடங்காச்சி வாழ்க்கை…
கனவில்தானே நமக்கு பல அரண்மனைகள் இருக்கு…

ஆண் : தண்ணிக்கும் தரைக்கும் அலையும்…
ஒரு வாத்தப் போல வாழ்க்க…
மனசு சிறகு விரிச்சா நாம பறக்க முடியுமா…

ஆண் : சந்திரனும் இருக்கு நட்சத்திரம் இருக்கு…
எண்ணி எண்ணி பாரு…
அது வெள்ளி பணம் நமக்கு…
ஒலகம் யாவும் சொந்தமுன்னாலும் ஏழைங்கதான்…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

—BGM—

ஆண் : கும்முடு போட்டு போட்டே…
நாம குனிஞ்சு வளைஞ்சு போனோம்…
கூனும் விழுகல மனம் கூனி போச்சுடா…

ஆண் : உறவு நிறைய இருக்கு…
அது செலவுதானே நமக்கு…
சேத்து வச்ச சொத்து அது நட்புதானடா…

ஆண் : தண்டவாளம் நடுவே பூத்த பூவ போல…
சோகத்திலும் சிரிப்போம்…
சோதனையில் மொளைப்போம்…
அடுத்த நாளை அடுத்த நாளில் பார்க்கலாம்…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…

ஆண் : எண்ணைய தேச்சு…
மண்ணில் புரண்டாலும் ஒட்டுவதில்லை…
கண்ணுக்கு முன்னால…
நடப்பதெல்லாம் கனவுமில்லை…

ஆண் : வாடக வீட்டுல வீசுற காத்துக்கு…
கட்டணம் உண்டாடா…
இருப்பதுதான் போதும் என்பவன்…
ஒருத்தன் உண்டாடா…
இங்க ஏழையின் சிரிப்பில் இறைவனைத்தான்…
பாத்தவன் உண்டா…

ஆண் : வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…


Notes : Vaangum Panathukkum Song Lyrics in Tamil. This Song from Dhoni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வாங்கும் பணத்துக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading