விளையாட்டா படகோட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல்இளையராஜாதோனி

Vilayaattaa Padagotty Song Lyrics in Tamil


BGM

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

BGM

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்…
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்…
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

BGM

பெண் : தத்தி தத்தி நீரில் ஆடி…
சுத்தி சுத்தி சுழலும்போதும்…
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்…

பெண் : எத்தனையோ புயலும் கண்டு…
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு…
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்…

பெண் : தன்னோட வழியெல்லாம்…
தன்னைத் தவிர துணையுண்டோ…
திசையெல்லாம் வழியாகும்…
ஒரு வழிதான் உனக்காகும்…
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

BGM

பெண் : வெட்டுப்பட்ட காயம் தாங்கி…
கட்டுமரம் வடிவம் கொண்டு…
காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்…

பெண் : பட்டப்பகல் வெயிலில் காய்ந்து…
நட்டநடு நிலவில் தோய்ந்து…
வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்…

பெண் : கடலில்தான் திரிந்தாலும் ஆழத்தை அறியாது…
கடல் சேரும் நதியெல்லாம் திரும்பித்தான் போகாது…
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…

பெண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்…
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்…
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா…

பெண் : விளையாட்டா படகோட்டி…
விளையாடும் பருவம் போய்…
நெசமான ஓடம் போல் நாமானோம்…


Notes : Vilayaattaa Padagotty Song Lyrics in Tamil. This Song from Dhoni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. விளையாட்டா படகோட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading