வெண்ணிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்விஜய் யேசுதாஸ், சைந்தவி & தன்வி ஷாபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Vennilavu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

ஆண் : கோயில் சிலைகள் மீது காணும் நிலைகள் யாவும்…
காயம் காணும்போது அட அது ஒரு கலையென ஆகும்…

பெண் : ஆதி மனிதன் வாழ்வில் ஆடைதானே ஏது…
ஆதாம் ஏவாள் போல நாம் இருப்பது இயற்கையும் ஆகும்…

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…

—BGM—

ஆண் : தொடங்கிட தயங்கமும் ஏனோ…
பின்பு தொடர்ந்திட ஏக்கமும் ஏனோ…
எதனாலே இந்த தாகம்…
உன்னை உயிருடன் குடித்திடத் தானோ…

பெண் : விழிகளில் மயக்கமும் ஏனோ…
இது விடிகிற வரையினில்தானோ…
பகல் நேரம் வரும்போது…
நீ மிக மிக நல்லவன்தானோ…

ஆண் : ஏ… காமம் ஒரு திமிங்கலம்தானோ…
தேகங்களும் விழுங்கிடத்தானோ…
நானும் இதில் பிழைத்திடுவேனோ… ஏனோ…

பெண் : கடிகாரம் முள்ளுக்குதானே…
கடிவாளம் இல்லவே இல்லை…
காமம் மணி பார்ப்பதே இல்லை… ஏனோ…

ஆண் : ஓஹோ… நேரம் பார்த்துக் கூறும்…
மேகம் எங்குமில்லை…
காலம் தாண்டி வாழும் தேசம்…
கட்டிலறைதானே பெண்ணே…

—BGM—

ஆண் : மெல்லிடை இளைக்கிய நூலின்…
அதை அடிகடி படிப்பவன் நானே…
சலிக்காத உணவாகும்…
அந்த உணவெது உதடுகள்தானே…

பெண் : ஹே… மரங்கொத்தி பறவையை போலே…
என் உடலினில் காயங்கள் தந்தாய்…
வலி கூட சுகம்தானே அதில் துடிப்பவள் வசிப்பவள் நானே…

ஆண் : ஏ… மலை பாதை இடையினில் பார்த்தேன்…
வேகத்தடை நெஞ்சினில் பார்த்தேன்
விபத்தாக்கும் விழிகளை பார்த்தேன் வா நீ…

பெண் : ஏஹே… நீச்சல் என்றால் பழகிட வேண்டும்…
பூப்பறிக்க பயிற்சியும் வேண்டாம்…
பெண்ணுடலும் பூச்செடியாகும் வா நீ…

ஆண் : ஓ… சேலை கசங்கிடாமல்…
நானும் கட்டி பிடிப்பேன்…
ஊரும் மறந்து பேரும் மறந்து…
பூமி விட்டு வா போகலாம்…

—BGM—

ஆண் : வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…

பெண் : பெண் மனது வெளிச்சத்தில் கூசும்…
விண்வெளிக்கே உடைத்திட வேண்டும்…
கும்மிருட்டில் உதறல்கள் கேட்க…
அணைக்கும்போது வருவேனே…


Notes : Vennilavu Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. வெண்ணிலவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading