முதல் முறை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண், ஹரிணி & திப்புபிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Mudhal Murai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்…
அருகினில் என்னை பார்க்க வேண்டும்…
உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே…

ஆண் : நீ விளையாட்டு பிள்ளை…
உனக்கு நான் தலையாட்டும் பொம்மை…
எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

—BGM—

ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே…
வானிலையும் மாறி போகுதே…
நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே…

பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே…
என் உதடும் கூற வேண்டுமே…
உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே…

ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்…
பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்…

ஆண் : நான் உன் மூச்சில் வாழும்…
வரம் அது எந்நாளும் போதும்…
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…

—BGM—

ஆண் : நீ நடந்து போகும் வேளையில்…
கால் வலிக்கும் என்று கலங்குவேன்…
தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே…

பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்…
நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்…
நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே…

ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே…
பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே…

ஆண் : கரு மழை மேகம் யாவும்…
இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்…
இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ…

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே…
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ…
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…


Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. முதல் முறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading