அது ஒரு காலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதா ஆனந்த்ஹரிசரண் & பிரேம்கி அமரன்பிரேம்ஜி அமரன்அதே நேரம் அதே இடம்

Athu Oru Kaalam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : ஹே… ஜோடியாய் இருந்தாள்…
ஒற்றையாய் விடத்தானா…
முத்துப்போல் சிரித்தாய்…
மொத்தமாய் அழத்தானா தானா…

ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்…
பிள்ளையாய் இரு நீயும்…
துன்பம்தான் மறந்து…
பட்டம் போல் பற எப்போதும்…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…
நீயும் நானும் நீயும் நானும்…

—BGM—

ஆண் : ஹோ… இதயம் என்பது வீடு…
ஒருத்தி வசிக்கும் கூடு…
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்…

ஆண் : ஓ… உலகம் என்பது மேடை…
தினமும் நடனம் ஆடு…
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு…

ஆண் : நெஞ்சோடு பாரம் கண்டால்…
தூரத்தில் தூக்கிப்போடு…
கண்ணோடு ஈரம் கண்டால்…
இன்னொரு பெண்ணைத்தேடு…

ஆண் : ஹோ… நான் போக பாதை ஏது…
வானில் மிதக்கலாம்…
வலி கூற வார்த்தை ஏது…
எல்லாம் மறக்கலாம்…

ஆண் : எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்…
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாவேன்…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : நீயும் நானும் நீயும் நானும் நீயும் நானும்…
நீயும் நானும் நீயும் நானும்…

—BGM—

ஆண் : ஹோ… அவளைப் பிரிந்து நானும்…
உருகும் மெழுகு ஆனேன்…
அவளின் நினைவால் எரிந்தேனே நானே…

ஆண் : ஓ… பழகத் தெரியும் வாழ்வில்…
விலகத் தெரிய வேண்டும்…
புரிந்தால் மனதில் துயரில்லைதானே…

ஆண் : கல்வெட்டாய் வாழும் காதல்…
அழித்திட வேண்டும் நீயே…
காற்றாற்றில் நீச்சல் காதல்…
கைத்தர வந்தேன் நானே…

ஆண் : ஹோ… ஏற்காமல் போனாள் ஏனோ…
சோகம் எதற்குடா…
ஆறாத காயம் தானோ…
காலம் மருந்துடா…

ஆண் : உலகின் நடுவே தனியானேன் நானே…
அவளால் அழுதேன் கடலானேன் நானே…

ஆண் : அது ஒரு காலம் அழகிய காலம்…
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்…

ஆண் : பழையது யாவும் மறந்திடு நீயும்…
சிரித்திடத்தானே பிறந்தது நீயும் நானும்…

ஆண் : ஹே… ஜோடியாய் இருந்தாள்…
ஒற்றையாய் விடத்தானா…
முத்துப்போல் சிரித்தாய்…
மொத்தமாய் அழத்தானா தானா…

ஆண் : ஹே… துள்ளித்தான் திரியும்…
பிள்ளையாய் இரு நீயும்…
துன்பம்தான் மறந்து…
பட்டம் போல் பற எப்போதும்…

—BGM—


Notes : Athu Oru Kaalam Song Lyrics in Tamil. This Song from Adhe Neram Adhe Idam (2009). Song Lyrics penned by Lalitha Anandh. அது ஒரு காலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading