வீசும் காற்றுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Veesum Kaatrukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

—BGM—

ஆண் : என்னையே திறந்தவள்…
யார் அவளோ…
உயிரிலே நுழைந்தவள்…
யார் அவளோ…

ஆண் : வழியை மறித்தாள்…
மலரைக் கொடுத்தாள்…
மொழியைப் பறித்தாள்…
மௌனம் கொடுத்தாள்…

ஆண் : மேகமே மேகமே அருகினில் வா…
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா…

பெண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

ஆண் : அன்பே உந்தன் பேரைத்தானே…
விரும்பிக் கேட்கிறேன்…
போகும் பாதை எங்கும் உன்னை…
திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…

—BGM—

ஆண் : சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்…
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்…
விழிகள் முழுதும் நிழலா இருளா…
வாழ்க்கைப் பயணம் முதலா முடிவா…

ஆண் : சருகென உதிர்கிறேன் தனிமையிலே…
மௌனமாய் எரிகிறேன் காதலிலே…

—BGM—

ஆண் : மேகம் போலே…
என் வானில் வந்தவளே…
யாரோ அவளுக்கு…
நீதான் என்னவளே…

ஆண் : மேகமேக மேகக்கூட்டம்…
நெஞ்சில் கூடுதே…
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி…
மின்னல் ஓடுதே…

ஆண் : வீசும் காற்றுக்கு…
பூவைத் தெரியாதா…
பேசும் கண்ணுக்கு…
என்னைப் புரியாதா…


Notes : Veesum Kaatrukku Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. வீசும் காற்றுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading