முத்தே முத்தம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்த்தி பாஸ்கர்கமல்ஹாசன், சுவர்ணலதா & பவதாரிணிகார்த்திக் ராஜாஉல்லாசம்

Mutthey Mutthamma Song Lyrics in Tamil


பெண் : ஏ லே லே லே ஹா…
ஏ லல லே லே ஹா…
ஏ லே லே லே ஹா…
ஏ லல லே லே ஹா…

பெண் : தந்தானே னே தந்தன்னா னே…
தந்தானே னே தந்தன்னா னே…
தனரீனனா ஆஆ தனனா னா…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…
முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : கடலுக்கு காதல் வந்தால்…
கரையேறி வந்தால் போதும்…
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…

BGM

பெண் : காதல் பயணம் தொடரட்டும்…
சூரியனில் பூ மலரட்டும்…
காதல் வெள்ளம் பொங்கட்டும்…
பூமி முழுதும் பாயட்டும்…

ஆண் : பூவில் சிறகு முளைக்கட்டும்…
காதல் சொல்லி பறக்கட்டும்…
வானம் உடைந்து போகட்டும்…
சொர்க வாசல் தெரியட்டும்…

பெண் : பூங்காற்று காதல் கொண்டால் பூலோகம் கொண்டாடும்…
பூஜைக்கு வாழும் பூக்கள் சொல்லாமல் திண்டாடும்…
உன் சுவாச காற்றோடு நான் வாழ்வேன் அன்பே…

பெண் : முத்து முத்து முத்து முத்து முத்து…
முத்து முத்து முத்து முத்து முத்து…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

BGM

ஆண் : வானம் முழுதும் பௌர்ணமி…
உன் அழகில்தான் வந்ததோ…
தேசம் முழுதும் மின்மினி…
உன் வரவை தான் தேடுதோ…

பெண் : மன்மதனின் பேர் சொன்னதால்…
மழை துளிகள் சூடானதோ…
இளமை கதவும் திறந்ததால்…
இதழ்கள் தினம் போராடுதோ…

ஆண் : நிஜமாக வாழும் காதல் நிழலாகி போகாது…
நிறமின்றி வாழும் காதல் எந்நாளும் மாறாது…
காதல் மெழுகாய் வருகிறேன் வா வா அன்பே…

பெண் : முத்து முத்து முத்து முத்து முத்து…
முத்து முத்து முத்து முத்து முத்து…

பெண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…
காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…

ஆண் : கடலுக்கு காதல் வந்தால்…
கரையேறி வந்தால் போதும்…
கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா…

ஆண் : உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…
உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்…
சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்…


Notes : Mutthey Mutthamma Song Lyrics in Tamil. This Song from Ullaasam (1997). Song Lyrics penned by Arivumathi. முத்தே முத்தம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading