வழிகாட்டும் என் தெய்வமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎஸ். பி. பாலசுப்ரமணியம்Unknownஇயேசு பாடல்கள்

Vazhi Kaattum En Deivamey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…
வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…

ஆண் : நதிமீது அலைந்தாடும் அகல் போலவே…
கதியேதும் தெரியாமலே…
நான் தடுமாறும் நிலை பாருமே…

குழு : அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி…
துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி…
எனைத் தாங்கும் என் தெய்வமே…
என் நிழலாக எழும் தெய்வமே…

ஆண் : வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…

—BGM—

ஆண் : எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்…
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்…

குழு : நீரின்றியே மண்ணில் வளமில்லையே…
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே…

ஆண் : எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்…
உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்…
எனைக்காக்கும் என் தெய்வமே…
என் உயிராக எழும் தெய்வமே…

குழு : நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது…
துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது…
பலனாக கை மீது வா…
இங்கு புலனாகும் இறையாக வா…

ஆண் : வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…

—BGM—

ஆண் : என் பாதை முடிவாகும் உன் தாளிலே…
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே…

குழு : உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ…
உன் பார்வைகள் என் வழியாகுமோ…

ஆண் : என் பாதை முடிவாகும் உன் தாளிலே…
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே…
இருள் நீக்கும் விளக்காகவே…
நான் சுடர்வீச எனை ஏற்றவா…

குழு : ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே…
விண் வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே…
நிறைவாழ்வின் விதையாகவே…
எங்கள் நிலவாழ்வு பயன் காணவா…

ஆண் : வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…
வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…

ஆண் : நதிமீது அலைந்தாடும் அகல் போலவே…
கதியேதும் தெரியாமலே…
நான் தடுமாறும் நிலை பாருமே…
நான் தடுமாறும் நிலை பாருமே…
நான் தடுமாறும் நிலை பாருமே…


Notes :  Vazhi Kaattum En Deivamey Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. வழிகாட்டும் என் தெய்வமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading