சூடி தந்த சுடர்க்கொடியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உன்னி மேனன், எஸ்.பி.பி. சரண், யுகேந்திரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்ஆனந்தம்

Choodithandha Song Lyrics in Tamil


—BGM—

குழு : சூடி தந்த சுடர்க்கொடியே…
சுபவேளை நீ வருக…
தேடிக் கொண்ட திரவியமே…
தேன் மாலை போல வருக…

குழு : மின்னும் அம்பு விழி…
சந்திர பிம்பம் பொன்னொளி வீச…
மங்கை மைதிலி இவள்…
செம்மலர் பாதத் தண்டைகள் ஆட…
சங்கம் சூழ வருக…
ஸ்ரீரங்கன் தாளை அடைய…
வளர் திங்களாகி வருக…

—BGM—

ஆண் : கோகுலத்து ராதை வந்தாளோ…
இந்த கல்யாண தேரிலே…
குழு : கல்யாண தேரிலே…

ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ…
எங்கள் வீட்டோடு வாழவே…
குழு : வீட்டோடு வாழவே…

ஆண் : அந்த தென்மதுரை மீனாள்…
விளக்கேற்ற வந்தாள்…
சீதனமாய் கையில்…
தாய்ப்பாசம் கொண்டு வந்தாள்…

பெண் : கோகுலத்து ராதை வந்தாளோ…
குழு : இந்த கல்யாண தேரிலே…

ஆண் : மிதிலை நகர் சீதை வந்தாளோ…
குழு : எங்கள் வீட்டோடு வாழவே…

—BGM—

பெண் : பொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க…
குழு : பெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க…

ஆண் : தங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க…
குழு : இன்னும் பத்து மடங்கு கொட்டுங்க…

ஆண் : உங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி…
சேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு…

ஆண் : மூணு முழம் மல்லிகைப்பூவும்…
கொஞ்சம் அல்வாவும் போதுமே…
எந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்…
அடி தலை சாஞ்சு மயங்குமே…

—BGM—

பெண் : தஞ்சாவூர் பொம்மப் போலத்தான்…
உங்க மாப்பிள்ளைத்தான் தலையாட்டுவார்…
குழு : ஆமா தலையாட்டுவார்…

ஆண் : தேசிங்கு ராஜன் எங்கண்ணன்… ஹேய்…
உங்க குதிரை வாலாட்டுமா…
குழு : ஆமா வாலாட்டுமா…

பெண் : ஏய்… தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே தந்திரம்…
சிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்திரம்…

ஆண் : போட்டியெல்லாம் போட்டுப் பாத்தோம்டி…
அது நமக்குள்ளதானடி…
ஜோடியத்தான் நல்லாப் பாருடி…
மதுர மீனாட்சி சொக்கன்டி…

—BGM—

குழு : வெள்ளிப்பனி முற்றத்தில்…
வெட்கம் எனும் தோட்டத்தில்…
மல்லிகை பூத்ததோ…
புது மல்லிகை பூத்ததோ…

குழு : மாடக் குயில் சத்தத்தில்…
மஞ்சள் முகம் நாணத்தில்…
மங்கலம் வந்ததோ…
தினம் மங்கலம் வந்ததோ…

குழு : இனி எங்கள் நெஞ்சக் கூடத்தில்…
தீபத் திருவிழா…
எங்கள் வானில் வெளிச்சம் வீசுதே…
சின்ன வெண்ணிலா…

குழு : எங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு…
தென்றல் சந்தனம் பூசுதோ…
எங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்…
ஒரு தேவதை வந்ததோ…

—BGM—


Notes : Choodithandha Song Lyrics in Tamil. This Song from Anandham (2001). Song Lyrics penned by Pa. Vijay. சூடி தந்த சுடர்க்கொடியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading