வான்மதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅரண்மனை கிளி

Vanmathiye Song Lyrics in Tamil


பெண் : வான்மதியே வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

பெண் : மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : காதலன் வாசல் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : வைகை வந்து கை அணைக்க…
வெள்ளி அலை மெய் அணைக்க…
வாடி நின்ற தென் மதுரை நான்தானோ…

பெண் : தென்றலுக்கு ஆசை இல்லை…
தேம்பிடுதே வாச முல்லை…
அம்மம்மா அன்புத் தொல்லை ஏன்தானோ…

பெண் : வண்ணப்பூவும் என்னைக் கண்டு…
வாய் இதழை மூடிக் கொண்டு…
புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது…

பெண் : அந்தி மாலை வரும் நோய் கொண்டு…
தன்னந்தனி நான் என்று…
பாவை நிதம் வாடும் விதம் பாராய்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து…
நித்தம் நித்தம் நான் அளக்கும்…
என்னுடைய ஆசைகளை கூறாயோ…

பெண் : உன்னைப்போல நானும் மெல்ல…
தேய்வதிங்கு நியாயம் அல்ல…
வெண்ணிலவே தூது செல்ல வாராயோ…

பெண் : எத்தனையோ சொல்லி வைத்தேன்…
எண்ணங்களை அள்ளிவிட்டேன்…
இன்னும் அந்த மன்னன் மனம் மாறாதது ஏன்…

பெண் : உயிர்க் காதல் துணை வராமல்…
கண்ணை இமை சேராமல்…
பாவை நித்தம் வாடும் விதம் பாராய்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

பெண் : மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…

பெண் : காதலன் வாசல் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…


Notes : Vanmathiye Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. வான்மதியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading