ஓட்ட சட்டிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉயர்ந்த உள்ளம்

Ottachattiya Vechikittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…

ஆண் : நீயும் நானும் ஒன்னாகணும்…
சம நீதி நியாயம் உண்டாகணும்…
சோறும் நீரும் எல்லாருக்கும்…
வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும்…
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
அட உருட்டு தாளம் போடாதே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

குழு : ஐஸ்லக்கா ஐஸ்லக்கா ஐஸ்லக்கா ஐஸ்லக்கா…

—BGM—

ஆண் : கட்டில்கள் மெத்தைகள் மேல் மாடி…
எல்லாம் நான் பார்த்தேன்டா முன்னாடி…
அங்கெல்லாம் இல்லாத சந்தோசம்…
இங்கே நான் கண்டேனே இந்நேரம்…

ஆண் : மலர் மஞ்சம் போட்டு நான் படுத்தேன்டா நேத்து…
அதில் ஒரு நாளும் தூக்கம் வரல… ஹேய் ஹேய்…
தரை மேலேதானே இங்கு படுத்தேன்டா நானே…
அட இது போல இன்பம் இல்ல…

ஆண் : அட வீட்ட விட்டதும் வெளிய வந்தது தெரிஞ்சது…
ஊரு உலகம் இருக்கும் இருப்பு புரிஞ்சது…
தெரிஞ்சத புரிஞ்சத எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
ஹே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…

ஆண் : சோறும் நீரும் எல்லாருக்கும்…
வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும்…
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
ததிகின தக்க தின்ன தின்ன…
உருட்டு தாளம் போடாதே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

—BGM—

ஆண் : முப்பாத்தம்மன்தானே தாயாட்டம்…
நாம் எல்லாம் அவ பெத்த சேயாட்டும்…
குப்பத்தில் இப்பதான் கொண்டாட்டம்…

ஆண் : காப்பாத்தும் ஆத்தா இரு கண்ணால பார்த்தா…
அட எந்நாளும் துன்பம் இல்ல…
கீழ் வர்க்கம் என்ன இதில் மேல் வர்க்கம் என்ன…
அட எல்லோரும் ஒரு தாய்பிள்ள…

ஆண் : குழந்தை குட்டிகள் இருக்க வேணும் அளவுல…
குடும்ப நடத்தை நினைக்க வேணும் மனசில…
தெரிஞ்சதா புரிஞ்சதா எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…

ஆண் : நீயும் நானும் ஒன்னாகணும்…
சம நீதி நியாயம் உண்டாகணும்…
சோறும் நீரும் எல்லாருக்கும்…
வந்து சேரந்தா பூமி நல்லாருக்கும்…
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
உருட்டு தாளம் போடாதே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…


Notes : Ottachattiya Vechikittu Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. ஓட்ட சட்டிய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading