வந்தாள் மகாலக்ஷ்மியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉயர்ந்த உள்ளம்

Vanthal Mahalakshmiye Song Lyrics in Tamil


ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என்றும் அவள் ஆட்சியே…

—BGM—

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே… ஆஆஆ…

—BGM—

ஆண் : பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்…
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்…
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்…
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்…

ஆண் : காமாட்சியோ மீனாட்சியோ…
அபிராமியோ சிவகாமியோ…
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு…
உருவம் எடுத்து உலவி நடந்து…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

—BGM—

ஆண் : நண்பா பெண்பாவை கண்வண்ணம்…
கள்ளம் இல்லாத பூவண்ணம்…
கண்டேன் சிங்கார கைவண்ணம்…
தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்…

ஆண் : பந்தம் சொந்தம் இல்லாமல்…
வந்தது இங்கொரு வண்ணமயில்…
வீடு வாசல் எல்லாமே…
மின்னுது மின்னுது புன்னகையில்…
மயங்கினேன்… சபாஷ்…

—BGM—

ஆண் : என் வழி நேராக ஆக்கி வைத்தாள்…
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்…
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்…
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்…

ஆண் : தெய்வீகமே பெண்ணானதோ…
நான் காணவே தேன் வந்ததோ…
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை…
இதழில் வடிய இனிமை விளைய…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

—BGM—


Notes : Vanthal Mahalakshmiye Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. வந்தாள் மகாலக்ஷ்மியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading