வான் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & ரஞ்சனிகீதபிரியன்மன்னவரு சின்னவரு

Vaan Nilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…

ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…
இந்த வீட்டினில் இருவரும்…
ஒன்றாகும் திருநாள்தான் இது…

ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…

ஆண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…

ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…

—BGM—

ஆண் : உயிரினை உனக்கொரு உயிலென நான்…
வரைந்தேனே வைரமணி…
எனக்கென எது இங்கு கிடையாது…
எல்லாமே நீ இனி…

பெண் : ஒருவரில் ஒருவர் கலந்த பின்னே…
இனி இங்கே இரண்டு இல்லையே…
நிழல் என இருட்டிலும் வருவேனே…
நீ வாழும் எல்லையே…

ஆண் : எனை தந்து நான் உனை வாங்கினேன்…
உன்னை வாங்கி என் மடி தாங்கினேன்…

பெண் : தினம் மாலையிலே பூ மாலையை போல்…
நான் உன் மார்பிலே…

ஆண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…

பெண் : கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…

ஆண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
பெண் : ஓஓ… குடியேறினால் கலைவானியே…

—BGM—

பெண் : ஒருமுறை இருவரும் உரசிடவே…
உருவாகும் தீப்பொறியே…
தலை முதல் கால் வரை தவித்தாயே…
தாங்காது பூவையே…

—BGM—

ஆண் : சிறு சிறு சிறு சிறு மலர்களிலே…
பனி தூங்கும் நேரமிது…
சிலு சிலு சிலு சிலு காதற்று வந்து…
சிந்தொன்று பாடுது…

பெண் : மனம் எங்கிலும் மழை தூறல்கள்…
நினைவெங்கிலும் மழை சாரல்கள்…

ஆண் : சற்று சாய்ந்திருக்க நீ பாய் போடு…
உன் பூ கூந்தலில்…

பெண் : வான் நிலாவே வான் நிலாவே…
வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி…
கால காலம் காதல் வாழும்…
நீல வான் மதி நீ இதன் சாட்சி…

பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…

ஆண் : இந்த வீட்டினில் இருவரும்…
ஒன்றாகும் திருநாள்தான் இது…

பெண் : மகாலட்சுமியின் மனை தேடியே…
குடியேறினால் கலைவானியே…


Notes : Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. வான் நிலாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading