உயிரே உயிரின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Uyire Uyirin Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…

—BGM—

ஆண் : வெள்ளி நிலா வானவெளி போவது போல்…
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா… ஹோ ஹோ…
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய்…
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா…

பெண் : ஒரு மர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை…
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை…
பால் முகம் மறக்காமல் தடுமாறும்…
சேய் முகம் கண்டால்தான் நிலை மாறும்…

—BGM—

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…
நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…

—BGM—

பெண் : தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல்…
சொந்தமொன்று மன்றமதில் வந்தது என்ன… ஹோஓ…
சொர்க்கமொன்று பூமி தன்னில் கண்டது போல்…
இன்பங்களை தந்து விட்டு சென்றது என்ன…

ஆண் : துணையாய் வழி வந்து எனை சேர்ந்த அன்பே…
இனியும் உனைப் போல இணை ஏது அன்பே…
எனக்கென நீதானே நம் வாழ்வில்…
உனக்கென நான்தானே எந்நாளும்…

—BGM—

ஆண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…

பெண் : நம் பந்தங்கள் சொந்தங்கள்…
இன்றா நேற்றா அன்பே சொல்…
இன்பங்கள் துன்பங்கள்…
என்றும் வாழ்வின் உண்மைகள்…

ஆண் & பெண் : உயிரே உயிரின் ஒளியே…
ஒருநாள் உறவா இதுவே…


Notes : Uyire Uyirin Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Piraisoodan. உயிரே உயிரின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading