| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் & எஸ். ஜானகி | இளையராஜா | அறுவடை நாள் |
Chinna Ponnu Song Lyrics in Tamil
ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…
ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
—BGM—
பெண் : சொந்தம் எல்லாம் சொந்தம் இல்ல…
பந்தம் எல்லாம் பந்தம் இல்ல…
வந்த துன்பம் கொஞ்சம் இல்ல…
இந்த நெஞ்சம் தாங்கவில்ல…
பெண் : ஒன்ன மட்டும் எண்ணி எண்ணி…
உத்தமியா வாழ்ந்த கன்னி…
பாடுறத பாக்கலையா…
பாட்டுச் சத்தம் கேக்கலையா…
ஆண் : கண்ணெல்லாம் வழி மேலே…
கண்ணீரு நதி போலே…
பெண் : தங்க மனம் கொண்டவரே…
தாலி ஒன்னு தந்தவரே…
கண்ணீரு இனி வேணா மாறாதோ துயர்தானா…
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால…
ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
—BGM—
பெண் : எத்தனையோ ஜென்மங்களா…
இஷ்டப்பட்டு சேந்திருந்தோம்…
இப்ப நம்ம சொந்தத்துல…
கண்ணு பட்டுப் போனதையா…
ஆண் : கண்ணு பட்ட பாவத்த நான்…
எண்ணி இப்ப வாடுறேனே…
கண்ட படி ஒன்ன எண்ணி…
காதலுல பாடுறேனே…
பெண் : நீ போட்ட ஒரு தாலி…
என் வாழ்வில் ஒரு கேலி…
பெண் : தங்க மனம் கொண்டவரே…
தாலி ஒன்னு தந்தவரே…
கண்ணீரு இனி வேணா மாறாதோ துயர்தானா…
நானும் வந்த வேள வாங்கிக்கிட்ட மால…
ஆண் : சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு பாரம்…
எப்போதும் விழி ஈரம்…
யாரு செஞ்ச பாவம்…
எப்படித்தான் தீரும்…
—BGM—
Notes : Chinna Ponnu Song Lyrics in Tamil. This Song from Aruvadai Naal (1986). Song Lyrics penned by Gangai Amaran. சின்னப் பொண்ணு பாடல் வரிகள்.
