ஓல குருத்தோல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாஅறுவடை நாள்

Ola Kuruththola Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…

பெண் : கதை கதையாம் காரணமாம்…
கல்யாணத் தோரணமாம் காத்தாடுது…
ஆஹா… நல்ல நல்ல நல்ல நல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…

BGM

பெண் : சந்தனத்த பூசாம சம்மந்தத்த பேசாம…
சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம…

குழு : சந்தனத்த பூசாம சம்மந்தத்த பேசாம…
பெண் : சேந்தது என்ன காத்தும் பூவும் கூசாம…

பெண் : இதுவும் பொதுவா இலக்கியம்தானே…
இயற்கை எழுதும் இலக்கணமோ…
மேகம் ஒரு ஈரச் சேல வானத்துல காயப் போட…
தூவும் மழச் சாரல் போல தினமும் அதிசயம் நடக்குது…

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…

BGM

பெண் : மல்லிகையும் பூத்தாச்சு…
அல்லியும்தான் பூத்தாச்சு…
கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பாத்தாச்சு…

குழு : மல்லிகையும் பூத்தாச்சு…
அல்லியும்தான் பூத்தாச்சு…
பெண் : கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பாத்தாச்சு…

பெண் : உலகம் முழுதும் பருவத்துக் கோலம்…
மனது முழுதும் கனவு மயம்…
பொண்ணு இவ சின்னப் பொண்ணு…
பேரில் மட்டும் கன்னிப் பொண்ணு…
பூவரசம் பூவப் போல சிரிச்சா புதுப் புது விதத்துல…

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…

குழு : கதை கதையாம் காரணமாம்…
கல்யாணத் தோரணமாம் காத்தாடுது… ஆஹா…
பெண் : நல்ல நல்ல நல்ல நல்ல…

பெண் : ஓல குருத்தோல காத்துல ஆடுது…
கண்ணன தேடுது…
வாழ இள வாழ வாசலில் ஆடுது…
வேளைய கூறுது…


Notes : Ola Kuruththola Song Lyrics in Tamil. This Song from Aruvadai Naal (1986). Song Lyrics penned by Gangai Amaran. ஓல குருத்தோல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading