| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | டி.எம். சௌந்தரராஜன் | கே.வி. மகாதேவன் | அடிமைப் பெண் |
Unnai Paarthu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது…
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது…
ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
—BGM—
ஆண் : பாடும் பறவை பாயும் மிருகம்…
பாடும் பறவை பாயும் மிருகம்…
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை…
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை…
ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
—BGM—
ஆண் : சேவல் கூட தூங்கும் உலகை…
கூவி எழுப்பும் குரலாலே…
—BGM—
ஆண் : ஏவல் செய்யும் காவல் காக்கும்…
நாய்களும் தங்கள் குணத்தாலே…
—BGM—
ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்…
உறவை வளர்க்கும் காக்கைகளே…
—BGM—
ஆண் : இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்…
உறவை வளர்க்கும் காக்கைகளே…
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்…
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே…
ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
—BGM—
ஆண் : வானில் நீந்தும் மேகம் கண்டால்…
வண்ண மயில்கள் ஆடாதோ…
—BGM—
ஆண் : வாழை போல தோகை விரிய…
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ…
—BGM—
ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு…
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ…
—BGM—
ஆண் : அழகும் கலையும் வாழும் நாடு…
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ…
அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்…
சரித்திரம் உன்னை இகழாதோ…
ஆண் : உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது…
—BGM—
ஆண் : நீ கடவுளைப் பார்த்தது கிடையாது…
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது…
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது…
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது…
ஆண் : இறைவன் ஒருவன் இருக்கின்றான்…
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்…
இறைவன் ஒருவன் இருக்கின்றான்…
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்…
—BGM—
ஆண் : தோன்றத்தான் போகிறது…
சம உரிமை சமுதாயம்…
மறையத்தான் போகிறது…
தலை வணங்கும் அநியாயம்…
ஆண் : மலரத்தான் போகிறது…
எங்களது புது வாழ்வு…
மாறத்தான் போகிறது…
மனிதா உன் விளையாட்டு…
Notes : Unnai Paarthu Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Vaali. உன்னைப் பார்த்து பாடல் வரிகள்.

