உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனுராக் குல்கர்னி & ஸ்ரேயா கோஷல்ஜஸ்டின் பிரபாகரன்ராதே ஷியாம்

Unnaalae Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…

ஆண் : ஒலி இல்லா இசையில்…
நனைக்காத மழையில்…
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்…

ஆண் : வழி இல்லா திசையில்…
ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்…

ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே…
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே…

BGM

பெண் : கோள் மாறும் மீன் மாறும் வான் மாறும் ஆனால்…
என் காதல் மாறாதடா…
விண்மீனின் தூசெல்லாம் தீர்ந்தாலும் கூட…
என் காதல் தீராதடா…

பெண் : நம் விதியோ நாளை இல்லை என்றது…
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது…

ஆண் : கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய…
தேகம் முழுதும் காதல் பாயுதே…

ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே…
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே…

BGM

பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்…
உண்டென்று கண்டேனடா…
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று…
உன் காதல் கொண்டேனடா…


Notes : Unnaalae Song Lyrics in Tamil. This Song from Radhe Shyam (2022). Song Lyrics penned by Madhan Karky. உன்னாலே பாடல் வரிகள்.


Scroll to Top