உன் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Un Paarvai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எதை கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலே பட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

—BGM—

ஆண் : இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்த்தை…
எதுவென்று சொல்ல இல்லை ஒரு வெவஸ்த்தை…
உனை எண்ணி தினம் புல்லரிக்கும் மனதினை…
செல்லரிக்க விடுபவள் நீதானே…

ஆண் : உயிர் நாளும் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க…
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி…
நல் இரவு ஒவ்வொன்றையும் முள் இரவு செய்தாயே…

ஆண் : நுரை ஈரல் தேடும் சுவாசமே…
விழி ஓரம் ஆடும் சொப்பனமே…
மடியில் வந்தால் சௌக்கியமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

—BGM—

ஆண் : சில காதல் இங்கே கல்லரைக்குள் அடக்கம்…
சில காதல் இங்கே சில்லரைக்கு தொடக்கம்…
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்…
சில்லரையை ஜெயித்திடும் என் காதல்…

ஆண் : உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்…
அது போல காதல் சிக்காகோவில் கண்டதில்லை…
சன்சீனாவும் கண்டதில்லை…
சோவியத்தும் கண்டதில்லை என்பேன்…

ஆண் : மழை நாளில் நீதான் வெப்பமே…
வெய்யில் நாளில் தண்ணீர் தெப்பமே…
உளி ஏதும் தீண்டா சிற்பமே… ஹேஹே… அன்பே…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

ஆண் : உன் பார்வை மேலேபட்டால்…
நான் தூசி ஆகின்றேன்…
ஒரு வார்த்தை பேசக் கேட்டால்…
நான் கவிதை என்கின்றேன்…

ஆண் : விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்…
எனை சேர நீ எது கேட்க்கிறாய் சொல்…

—BGM—


Notes : Un Paarvai Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. உன் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading