தமிழா தமிழா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்டி. இமான்தமிழன்

Tamizha Tamizha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தமிழா ஹேய் தமிழா…
குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…

ஆண் : தமிழா ஹேய் தமிழா…
குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…
தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…
தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…

ஆண் : உன்னை வெல்வாய் தமிழா…
உலகை வெல்வாய் தமிழா…
இமய மலையை இடுப்பில் கட்டி…
இழுத்து வருவாய் தமிழா… ஆஆ…

குழு : தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா தமிழ் தமிழா…

ஆண் : உன்னை வெல்வாய் தமிழா…
உலகை வெல்வாய் தமிழா…
இமய மலையை இடுப்பில் கட்டி…
இழுத்து வருவாய் தமிழா… ஆஅ…

ஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்…
தமிழன் நாட்டில் வரவேண்டும்…
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்…
கைகள் கட்டி தொழவேண்டும்…

ஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்…
செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்… வேண்டும்… ம்ம்ம்…

—BGM—

ஆண் : வாயை கட்டி வயிற்றை கட்டி…
வரியை கட்டுகிறாய்…
அந்த வரிகள் எங்கே வழிகிறதென்னும்…
வழிகள் அறிவாயா… ஆ

ஆண் : பட்டு வேட்டிகள் வாங்கித்தரவே…
சுதந்திரம் வந்ததடா…
ஆனால் கட்டி இருந்த கோவணம் கூட…
கழண்டு போனதடா…

ஆண் : கருப்பு கோழி காணோமென்று…
காவல் நிலையம் போன மகள்…
கற்பை காணோம் காணோமென்று…
கதறிக்கொண்டு திரும்புவதோ…

ஆண் : ஜனாதிபதியும் ரிக்க்ஷாகாரனும்…
சட்டத்தின் முன் ஒருவரடா…
ஊமை ஜனங்கள் உரிமை பற்றி…
உணரச்செய்வது கடமையடா…

குழு : சுதந்திரம் காக்க போராடு…
சட்டம் தெரிந்து வாதாடு…
சுற்றிச்சூழும் சூழ்ச்சி முறித்து…
வெற்றிக்குலத்தில் நீராடு…

ஆண் : தமிழா ஹேய்… தமிழா ஹேய்…

—BGM—

ஆண் : உன்னை வெல்வாய் தமிழா…
உலகை வெல்வாய் தமிழா…
இமய மலையை இடுப்பில் கட்டி…
இழுத்து வருவாய் தமிழா… ஆஅ…

ஆண் : தங்க வயல்களும் வெள்ளி நதிகளும்…
தமிழன் நாட்டில் வரவேண்டும்…
காற்றும் மழையும் தமிழன் சொன்னால்…
கைகள் கட்டி தொழவேண்டும்…

ஆண் : செவ்வாய் கிரகம் வரையில் தமிழன்…
செல்வாக்கெல்லாம் பெறவேண்டும்… வேண்டும்… ம்ம்ம்…


Notes : Tamizha Tamizha Song Lyrics in Tamil. This Song from Thamizhan (2002). Song Lyrics penned by Vairamuthu. தமிழா தமிழா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading