யாரோ யாருக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராயுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Yaaro Yarukkul Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

—BGM—

பெண் : ஊரை வெல்லும் தோகை நானே…
உன்னால் இன்று தோற்றுப்போனேன்…
கண்ணால் யுத்தமே நீ…
செய்தாய் நித்தமே…

ஆண் : ஓஹோ… ஹோ… நின்றாய் எங்கு மின்னல் கீற்றா…
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா…
உன்னை சூழ்கிறேன் நான்…
உன்னை சூழ்கிறேன்…

பெண் : காற்றில் வைத்த சூடம் போலே…
காதல் தீர்ந்து போகாது…

ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி…
என்னால் வாழ ஆகாது…
அன்பே வா… ஹே… ஹே…

—BGM—

ஆண் : யாரோ…

பெண் : ஆஆ… யாருக்குள் இங்கு யாரோ…

ஆண் : ம்ம்… ம்ம்… யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…

பெண் : விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

—BGM—

ஆண் : உந்தன் ஆடை காயப்போடும்…
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்…
என்னை எண்ணினேன் நான்…
தவம் பண்ணினேன்…

பெண் : ஆஹ… ஹஹ… கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி…
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி…
எட்டி போய் விடு இல்லை…
ஏதோ ஆய்விடும்…

ஆண் : காதல் கொண்டு பேசும் போது…
சென்னை தமிழும் செந்தேன்தான்…

பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது…
வங்க கடலும் வாய்க்கால்தான்…
அன்பே வா… ஹா…

—BGM—

ஆண் : யாரோ…

பெண் : ஹ்ம்ம்…

ஆண் : யாருக்குள் இங்கு யாரோ…

பெண் : ஆஹா… ஆஹா…

ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி…

ஆண் : காதல் வரம் நான் வாங்க…
கடை கண்கள் நீ வீச…
கொக்கை போல நாள்தோறும்…
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி…

பெண் : யாரோ… யாருக்குள் இங்கு யாரோ…
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ…
விடை இல்லா ஒரு கேள்வி…

ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி…


Notes : Yaaro Yarukkul Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Vaali. யாரோ யாருக்குள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading