ஜல்சா பண்ணுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரஞ்சித், திப்பு, பிரேம்ஜி அமரன், ஹரிசரண் & கார்த்திக்யுவன் ஷங்கர் ராஜாசென்னை – 600028

Jalsa Pannungada Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…

ஆண் : இருக்குற வரைக்கும் அனுபவிக்க…
இளமை ஏத்துக்கடா…
வருகுற வரைக்கும் லாபமடா…
வசதிய தேடுங்கடா… கோ…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

—BGM—

ஆண் : ஞாபகம் வந்ததடா…
அந்த நாள் ஞாபகம் வந்ததடா…
நண்பனை விட ஒருத்தன்…
லைஃப்வுக்கு தேவை இல்லையடா…

ஆண் : நட்புக்கு கூட கற்புகள் உண்டு…
நல்லா தெரிஞ்சுக்கடா…
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா…
வெற்றிகள் குமியுமடா…
நம் வெற்றிகள் குமியுமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : உழைக்கும் கைய நம்பி…
நாளைக்கு உலகமே இருக்குதடா…
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா…
ஊரே வணங்குமடா…

ஆண் : நான் உங்கள் தோழன் நீ எந்தன் நண்பன்…
பிரிவே இல்லையடா…
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்…
நம்பிக்கை வையிங்கடா…
என் மேல நம்பிக்கை வையிங்கடா… வா…

ஆண் : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

—BGM—

ஆண் : காதல் வந்திச்சின்னா…
முகத்தில கலர் பல தெரியுமடா…
கண்ணாடி முன்னாடி நீ நின்னா…
கவர்ச்சியும் தோனுமடா…

ஆண் : காதலி இருந்தா கவலைகள் தீரும்…
காதல் பண்ணுங்கடா…
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி…
நல்லா இருக்குமடா…
உன் வாழ்க்க நல்லா இருக்குமடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஆண் : டாவுல விழுந்தாக்கா…
மனசு நோவுல அழுகுமடா…
தீவுல இருப்பதுபோல்…
திசையே தெரியாம போகுமடா…

ஆண் : இன்னைக்கி சிரிப்பா நாளைக்கு மொறைப்பா…
இன்னமும் இருக்குதடா…
அந்த ரோதன நமக்கு இப்போ எதுக்கு…
உஷாரா இருந்துக்கடா…
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா…

குழு : இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

குழு : வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…

—BGM—


Notes : Jalsa Pannungada Song Lyrics in Tamil. This Song from Chennai-600028 (2007). Song Lyrics penned by Gangai Amaran. ஜல்சா பண்ணுங்கடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading