உன் இதழ்களினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஅனன்யா பட்இளையராஜாமார்கழி திங்கள்

Un Idhazhgalinaal Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…

பெண் : இந்த நினைவை சுமந்தேன்…
புது வானில் மிதந்தேனே…
இனிதாய் மாறும் இளம் காலம்…
நகராது நிற்க வேண்டும்…

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…

BGM

பெண் : பற்றிக் கொண்டது முத்தத்தீ…
தித்திக்கும் நினைவில்…
சுற்றிப் பரவுது தேகத்தில்…
உள்ளதததில் கலந்து…

பெண் : நினைவெல்லாம் நிறைந்திருப்பாய்…
தனிமையில் தள்ளி விடுவாய்…
தவித்திருக்கும் எனை திருத்தி…
படுக்கையில் கிடக்க வைப்பாய்…

பெண் : தலையணைக்கே ஒரு துணையானேன்…
உனை நான் அணைத்திருப்பேன்…
நித்தம் இதுபோல் கழிந்திடுதே…
என் இனிக்கும் இளம்பருவம்…

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…

BGM

பெண் : மனம் ஏன் அலையாய் அலைகிறதே…
உன் பாதம் தழுவ…
உயிரும் தவியாய் தவித்திருக்கு…
உயிரோடு இணைந்திருக்க…

பெண் : அருகிருந்தால் அருமருந்து…
அதுவொரு தனி விருந்து…
மனம் இருந்தால் இதை விரும்பு…
வரும் வரும் இளம் குறும்பு…

பெண் : ஒற்றைக்கிளி ஒன்று உலவுதடா…
கட்டிக் கலந்திடடா…
வேற்றுக் கூட்டினில் மாட்டிக்கொண்டேன்…
கூண்டை திறந்து விடவா…

பெண் : உன் இதழ்களினால் இதயத்திலே…
ஏதோ உணர்வு நுழைகிறதே…
அது எங்கெங்கோ எனை அழைத்து…
வேறோர் உலகத்தை காட்டிடுதே…


Notes : Un Idhazhgalinaal Song Lyrics in Tamil. This Song from Margazhi Thingal (2023). Song Lyrics penned by Ilaiyaraaja. உன் இதழ்களினால் பாடல் வரிகள்.


Scroll to Top