என் தெய்வத்துக்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுமுகேஷ் முகமதுஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

En Deivathukke Song Lyrics in Tamil


ஆண் : தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…

BGM

ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…
சொமந்த புள்ள பத்து மாசம்தான்…
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சுமா…

ஆண் : ஆராரோ சொன்ன தாய் யாரோ…
அட நான் யாரோ ஆனால் கோளாறோ…
ஆராரோ சொன்ன தாய் யாரோ…
அட நான் யாரோ ஆனால் கோளாறோ…

BGM

ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா…

ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம்…
செத்த பின்னே கொள்ளி வைப்போம்…
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா…
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா…

ஆண் : என் தேவதைக்கு மாறு வேஷமா…
சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா…
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம்தான்…
அடி என்ன முறை இப்ப நானும்தான்…

ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ…
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ…
ஆராரோ ஆரி ஆராரோ…
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ…

ஆண் : என்ன விதி என்ன விதிடா…
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா…
அட என்ன சொல்ல என்ன சொல்லடா…
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா…

பெண் : ஆராரோ ஆரி ஆராரோ…

ஆண் : பாசத்துக்கு பள்ளிக்கூடமா…
அட பாடம் கத்து பாசம் வருமா…
கல்லுக்குள்ளே சாமி வரும்டா…
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா…

ஆண் : அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா…
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா… ஆஆஅ…
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா…
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா…

ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா… ஆஆஅ…
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா…

ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம்…
செத்த பின்னே கொள்ளி வைப்போம்…
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டாடா…
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டாடா…

ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…


Notes : En Deivathukke Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. என் தெய்வத்துக்கே பாடல் வரிகள்.


Scroll to Top