தோகை இளமயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபயணங்கள் முடிவதில்லை

Thogai Ilamayil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
கோதை இவள் விழி நூறு கவிதைகள்…
நாளும் எழுதிடுமோ…

ஆண் : தேன் சிந்தும் நேரம்…
நான் பாடும் ராகம்…
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ…

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…

—BGM—

ஆண் : கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்…
இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்…
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்…
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்…

ஆண் : விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா…
அன்னமும் இவளிடம் நடை பழகும்…
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்…

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…

ஆண் : தேன் சிந்தும் நேரம்…
நான் பாடும் ராகம்…
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ…

—BGM—

ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்…
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்…
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்…
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்…

ஆண் : அருவிகளோ ராகந் தரும்…
அதில் நனைந்தால் தாகம் வரும்…
தேவதை விழியிலே அமுத அலை…
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை…

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது…
வானில் மழை வருமோ…
கோதை இவள் விழி நூறு கவிதைகள்…
நாளும் எழுதிடுமோ…

ஆண் : தேன் சிந்தும் நேரம்…
நான் பாடும் ராகம்…
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ…


Notes : Thogai Ilamayil Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Vairamuthu. தோகை இளமயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading