இளைய நிலா பொழிகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபயணங்கள் முடிவதில்லை

Ilaya Nila Pozhigirathe Song Lyrics in Tamil


ஆண் : இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே…
விழாக் காணுமே வானமே…

ஆண் : இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே…
விழாக் காணுமே வானமே…

ஆண் : இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…

—BGM—

ஆண் : வரும் வழியில் பனி மழையில்…
பருவ நிலா தினம் நனையும்…
முகிலெடுத்து முகம் துடைத்து…
விடியும் வரை நடை பழகும்…

ஆண் : வரும் வழியில் பனி மழையில்…
பருவ நிலா தினம் நனையும்…
முகிலெடுத்து முகம் துடைத்து…
விடியும் வரை நடை பழகும்…

ஆண் : வான வீதியில் மேக ஊர்வலம்…
காணும் போதிலே ஆறுதல் தரும்…
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்…

ஆண் : இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே…
விழாக் காணுமே வானமே…

ஆண் : இளைய நிலா பொழிகிறதே…

—BGM—

ஆண் : முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ…
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ…
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ…
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ…

ஆண் : நீல வானிலே வெள்ளி ஓடைகள்…
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்…
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்…

ஆண் : இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே…
விழாக் காணுமே வானமே…

ஆண் : இளைய நிலா பொழிகிறதே…

—BGM—


Notes : Ilaya Nila Pozhigirathe Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Vairamuthu. இளைய நிலா பொழிகிறதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading