சோல பசுங்கிளியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் ராசாவின் மனசிலே

Sola Pasunkiliye Song Lyrics in Tamil


ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணுபட போகும் என்று பொத்தி வச்ச பூங்குயிலே…
மண்ணு பட்டு போகும் என்று நெஞ்சம் இன்று தூங்கலியே…

ஆண் : வாங்கி வந்த மல்லியப்பூ வாசம் இன்னும் போகலியே…
பந்தகாலு பள்ளம் இன்னும் மண்ணெடுத்து மூடலியே…

ஆண் : நீ வாழ்ந்த காட்சி எல்லாம் தேடுகின்றேனே…
நான் இங்கே நாதி இன்றி வாடுகின்றேனே…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

BGM

ஆண் : தங்கத்துல தாலி பண்ணி தங்கத்துக்கு போட்டேனே…
தங்கியவள் வாழவும் இல்லே தட்டு கெட்டு போனேனே…

ஆண் : சங்கு நிற தாமரைய செங்கரையான் தீண்டிடுமோ…
மஞ்ச முக மல்லிகைய மண்கரையான் மாத்திடுமோ…

ஆண் : கற்பூர கட்டி ஒன்னு காத்துல போனதடி…
செந்தூர வாழை ஒன்னு சேத்துல சாஞ்சதடி…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…

ஆண் : கோடி திரவியமே வந்தது வந்தது ஏன்…
கொள்ள போனது போனது ஏன்…
ஆவி துடிக்க விட்டு சென்றது சென்றது ஏன்…
விட்டு சென்றது சென்றது ஏன்…

ஆண் : சோல பசுங்கிளியே…
சொந்தமுள்ள பூங்கொடியே…
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி சோலையம்மா…


Notes : Sola Pasunkiliye Song Lyrics in Tamil. This Song from En Rasavin Manasile (1991). Song Lyrics penned by Ilayaraja. சோல பசுங்கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading