தித்திக்கும் தேன் பாகும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எம்.பி.சிவம்டி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Thithikkum Then Pagum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்…
தீஞ்சுவை யாகவில்லையே…
முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே…

ஆண் : தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்…
தீஞ்சுவை யாகவில்லையே…
முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே…

ஆண் : எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்…
இன்பம் ஏதும் இல்லையே…
குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே…

—BGM—

ஆண் : அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்…
அங்கம் மணக்கவில்லையே…
முருகய்யா அங்கம் மணக்கவில்லையே…

ஆண் : அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்…
அங்கம் மணக்கவில்லையே…
முருகய்யா அங்கம் மணக்கவில்லையே…

ஆண் : சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல…
சீர் மணம் வேறு இல்லையே…
குமரய்யா சீர் மணம் வேறு இல்லையே…

—BGM—

ஆண் : முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்…
முதற் பொருளாகவில்லையே…
முருகய்யா முதற் பொருளாகவில்லையே…

ஆண் : சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல…
மெய்ப் பொருள் வேறு இல்லையே…
குமரய்யா மெய்ப் பொருள் வேறு இல்லையே…

ஆண் : எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்…
எண்ணத்தில் ஆட வில்லையே…
முருகய்யா எண்ணத்தில் ஆட வில்லையே…

ஆண் : எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்…
எண்ணத்தில் ஆட வில்லையே…
முருகய்யா எண்ணத்தில் ஆட வில்லையே…

ஆண் : மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்…
மற்றொரு தெய்வமில்லையே…
குமரய்யா மற்றொரு தெய்வமில்லையே…

ஆண் : தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்…
தீஞ்சுவை யாகவில்லையே…
முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே…

ஆண் : எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்…
இன்பம் ஏதும் இல்லையே…
குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே…

ஆண் : தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்…
தீஞ்சுவை யாகவில்லையே…
முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே…
முருகய்யா…


Notes : Thithikkum Then Pagum Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by M.P. Sivam. தித்திக்கும் தேன் பாகும் பாடல் வரிகள்.


Scroll to Top