வனக்குயிலே குயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபிரியங்கா

Vanakkuyile Kuyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…
கொடி மலரே மலர் விடும் இதழே…
இதழ் தரும் மதுவே… ஏஏஏஏ…

ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…

ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே…
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன…

ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…

—BGM—

ஆண் : உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே…
ஓயாமலே என்னைப் பந்தாடுதே…
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே…
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே…

ஆண் : படித்தால் இனித்திடும் புதினம்…
உன்னை நான் மறப்பது கடினம்…
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு…
வலைக்குள் தவித்திடும் தவிப்பு…
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்…
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்…

ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…

—BGM—

ஆண் : செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே…
கூந்தல் பனை தோரணம் ஆனதே…
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே…
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே…

ஆண் : மண நாள் நினைவுகள் மலரும்…
மனதில் மலையென வளரும்…
வருவேன் தருவேன் கிளியே…
விழிக்குள் இருக்கும் விழியே…
இணைந்தால் இருவர் இணைந்தால்…
இன்ப வரவும் உறவும் சுகமே…

ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசையே… ஏஏஏஏ…

ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே…
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன…

ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே…
கவி தரும் இசை… ஏஏஏஏ…


Notes : Vanakkuyile Kuyil Song Lyrics in Tamil. This Song from Priyanka (1994). Song Lyrics penned by Mu. Metha. வனக்குயிலே குயில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading